கட்டுமானப் பணியின்போது 10 மீட்டர் உயரத்திலிருந்து கீழே விழுந்த பங்ளாதேஷ் ஊழியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். ஆர்ச்சர்ட் ரோடு அருகில் உள்ள சொகுசு கொண்டோமினிய கட்டுமானத் தளத்தில், சாரக்கட்டுப் பணிகளை அந்த ஊழியர் மேற்கொண்டு இருந்தபோது சம்பவம் நிகழ்ந்தது. 18 தோம்லின்சன் ரோட்டில் பார்க் நோவா என்னும் கொண்டோமினியம் கட்டப்பட்டு வருகிறது.
இந்தத் தளத்தில் திங்கட்கிழமை பிற்பகல் 3 மணியளவில் இந்த வேலையிட விபத்து நிகழ்ந்ததாக மனிதவள அமைச்சு தெரிவித்தது.
கீழே விழுந்ததால் அந்த 31 வயது ஊழியரின் வலது கையிலும் இரு தொடைகளிலும் காயம் ஏற்பட்டதாகவும் அவரது உச்சந்தலை யில் வெட்டுகள் ஏற்பட்டதாகவும் அமைச்சு கூறியது.
'செங் இயூ ஸ்கஃபோல்டிங் அண்ட் என்ஜினியரிங்' நிறுவனத்தின் ஊழியர் அவர்.
சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது அவர் நினைவோடு இருந்தார் என்றும் மருத்துவமனையில் அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டது.
இச்சம்பவம் காரணமாக, உயரத்தில் மேற்கொள்ளப்படும் எல்லா விதமான சாரக்கட்டு நடவடிக்கை
களையும் நிறுத்தி வைக்க அமைச்சு உத்தரவிட்டுள்ளது.
சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட படம் ஒன்று 'வாட்ஸ்அப்' சமூக ஊடகத்தில் பரவியது. ஆம்புலன்ஸ் வாகனம், சிங்கப்பூர் குடிமைத் தற் காப்புப் படையின் மூன்று வாகனங் கள், பேரிடர் உதவி, மீட்புக் குழு வாகனம், காவல்துறையின் கார் ஆகியன அங்கு காணப்பட்டன.

