ரயில் நிலையங்களில் எரிசக்தி பயன்பாட்டைக் குறைக்க செயற்கை நுண்ணறிவு முறை

ரயில் நிலையங்களில் எரிசக்தி பயன்பாட்டைக் குறைக்க செயற்கை நுண்ணறிவு முறை

2 mins read
c79c04e8-b980-4381-9683-75eed708c751
-

எம்­ஆர்டி நிலை­யங்­களில் எரி­சக்தி நுகர்­வைக் குறைக்க செயற்கை நுண்­ண­றி­வைப் பயன்­ப­டுத்­து­வ­தற்­கான சோதனை நிலத்­த­டி­யில் உள்ள இரு எம்­ஆர்டி நிலை­யங்­களில் நடத்­தப்­ப­டு­கிறது.

வெப்­ப­நி­லையை குளி­ராக வைத்­தி­ருக்­கும் நிலை­யில் எரி­சக்­தி­யின் பயன்­பாட்டை எப்­ப­டிக் குறைக்­க­லாம் என்­ப­தற்­கான சோதனை பாய லேபார், மெக்­பர்­சன் எம்­ஆர்டி நிலை­யங்­களில் மேற்­கொள்­ளப்பட்டு வரு­கிறது.

'என்­வி­ஷன் டிஜிட்­டல்' என்­னும் கரி­மக் குறைப்பு மென்­பொ­ருள் நிறு­வ­னத்­து­டன் இணைந்து எஸ்­எம்­ஆர்டி நிறு­வ­னம் இந்த மூன்று மாத சோத­னையை இம்மாதம் 15ஆம் தேதி தொடங்­கி­யது.

வட்­டப்­பாதை ரயில் தடத்­தில் அமைந்­துள்ள இந்த எம்­ஆர்டி இரு நிலை­யங்­க­ளி­லும் எரி­சக்­திப் பயன்­பாட்டை 5 முதல் 10 விழுக்­காடு வரை குறைப்­பது சோத­னை­யின் நோக்­கம்.

இந்­தச் சோதனை வெற்­றி­யைத் தந்­தால், தீவு முழு­வ­தும் உள்ள 70 நிலத்­தடி நிலை­யங்­களில் அடுத்த ஆண்டு இறு­திக்­குள் செயற்கை நுண்­ண­றிவு முறை நிறு­வப்­படும்.

வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்கு, வட்­டப்­பாதை மற்­றும் தாம்­சன்-ஈஸ்ட் கோஸ்ட் ஆகிய ரயில் தடங்­களில் இந்த நிலை­யங்­கள் அமைந்­துள்­ளன.

இந்த எம்­ஆர்டி நிலை­யங்­களில் ஆண்­டுக்கு 7,000 மெகா­வாட் மணி­நே­ரங்­க­ளைக் குறைக்க செயற்கை நுண்­ண­றிவு உத­வும். இவ்­வாறு மிச்­சப்­படும் எரி­சக்தி, 1,500 நான்­கறை வீவக வீடு­க­ளுக்கு ஓராண்­டுக்­குப் பயன்­ப­டுத்­தக்­கூ­டிய அள­வோடு ஒத்­தி­ருக்­கும்.

வானிலை நில­வ­ரம், பய­ணி­

க­ளின் எண்­ணிக்கை ஆகி­ய­வற்­றின் தர­வு­க­ளைப் பயன்­ப­டுத்தி, அடுத்த மணி நேரத்­தில் ரயில் நிலை­யத்­தில் வெளி­யா­கக்­கூ­டிய வெப்­பத்­தின் அளவை செயற்கை நுண்­ண­றிவு கணிக்­கும்.

பின்­னர், அந்­தக் கணக்­கீட்­டின் அடிப்­ப­டை­யில் குளி­ரூட்­டி­யின் அளவு தாமாக மாற்றி அமைக்­கப்­படும். தேவை­யான 26 டிகிரி சென்ட்­டி­கி­ரேட்­டில் குளி­ரூட்­டியை வைப்­ப­தன் மூலம் சரி­யான எரி­சக்­திப் பயன்­பாடு சாத்­தி­ய­மா­கும்.

ஒரு எம்­ஆர்டி நிலை­யத்­தைக் குளி­ரூட்­டு­வ­தற்­குத் தேவை­யான எரி­சக்­தி­யைக் காட்­டி­லும் அதி­க­மா­கப் பயன்­ப­டா­த­வாறு தானாக மாற்­றும் முறை­யால் பரா­ம­ரிப்பு நேர­மும் மிச்­சப்­படும்.

செயற்கை நுண்­ண­றிவு சோதனை முறை­யின் தொடக்க நிகழ்­வில் பேசிய எம்­ஆர்டி டிரெய்ன்ஸ் நிறு­வ­னத்­தின் தலை­வர் திரு லாம் ஷீ காய், எம்­ஆர்டி ரயில்­களே சிங்­கப்­பூர் பொதுப் போக்­கு­வ­ரத்­தின் ஆகச் சிறந்த பசுமை முறை­யைப் பின்­பற்­றக்­கூ­டி­யவை என்­றும் எரி­சக்­திப் பயன்­பாட்­டைக் குறைக்க பசுமை முயற்­சி­களை எஸ்­எம்­ஆர்டி நிர்­வா­கம் விரி­வாக்­கம் செய்து வரு­வ­தா­க­வும் குறிப்­பிட்­டார்.