கொவிட்-19 மீள்திறன் விருது: மேல் விவரங்கள் அறிவிப்பு

கொவிட்-19 மீள்திறன் விருது: மேல் விவரங்கள் அறிவிப்பு

2 mins read
e7db2216-8058-4f37-9b87-6342cc4e9e73
-

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லுக்கு எதி­ரான போரில் நேரடி­யா­கப் பங்­க­ளித்­தோரை அங்­கீ­கரிக்­கும் தேசிய அள­வி­லான சிறப்பு விரு­து­கள் குறித்த மேல் விவ­ரங்­கள் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன.

முன்­ன­தாக, கொவிட்-19 மீள்­தி­றன் பதக்­கம், சான்­றி­தழ் ஆகிய அங்­கீ­கா­ரங்­கள் குறித்து இவ்­வாண்டு ஆகஸ்ட் மாதம் நிகழ்த்­திய தேசிய தினப் பேரணி உரை­யில் பிர­த­மர் லீ சியன் லூங் அறி­வித்­தார்.

கிரு­மிப் பர­வ­லுக்கு எதி­ரான சிங்­கப்­பூ­ரின் தீவிர நட­வ­டிக்­கைக்­குப் பங்­க­ளித்த குழு­விற்கு சான்­றி­தழ் வழங்­கப்­படக்கூடும் என்­றும் பதக்­கம் இதன் தொடர்­பில் சிறப்­பா­கச் செயல்­பட்ட தனி­ந­ப­ருக்கு வழங்­கப்­படக்கூடும் என்­றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பதக்கத்தின் வடிவம் முதன்முதலாக நேற்று முன்தினம் அரசிதழில் வெளியிடப்பட்டது

வெள்ளியாலான பதக்கத்தின் நடுவில் உள்ள வட்டத்தைச் சுற்றி அதை நோக்கிய எட்டு அம்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

பதக்­கத்­தின் முன்­பக்­கம் பிறை நில­வும் ஐந்து நட்­சத்­தி­ரங்­களும் இடம்­பெற்­றுள்­ளன. அத்­து­டன் 'கொவிட்-19', 'மீள்­தி­றன் பதக்­கம்' எனும் சொற்­கள் பொறிக்­கப்­பட்­டுள்­ளன. பதக்­கத்­தின் பின்­பக்­கம் நாட்­டின் சின்­ன­மும் அதைச் சுற்­றி­லும் 'எஸ் ஜி யுனைடெட்', 'ஸ்ட்­ராங்­கர் டுகே­தர்' எனும் சொற்­களும் பொறிக்­கப்­பட்­டுள்­ளன.

தனித்­து­வ­மான முறை­யில் பங்­களித்­தோ­ருக்கு தற்­போது வழங்­கப்­படும் பாராட்­டுப் பதக்­கம், பொதுச் சேவைப் பதக்கம்,

பொது நிர்­வா­கப் பதக்­கம் போன்­ற­வற்­றில் கொவிட்-19 என்ற வார்த்­தை­யும் சேர்த்­துப் பொறிக்­கப்­பட்டு வழங்­கப்­படும் எனக் கூறப்­பட்­டது.

கொவிட்-19 மீள்­தி­ற­னுக்­குப் பங்­க­ளித்­தோ­ருக்­கான அனைத்து விரு­து­களும் நாடா ஒன்­றில் இணைக்­கப்­பட்­டி­ருக்­கும்.

அதன் நடு­வில் மெல்­லிய சிவப்­புக் கோடும் அதன் இரு பக்­க­மும் ஆங்­கி­லத்­தில் 'டர்க்­காய்ஸ்' எனப்­படும் பசுமை கலந்த நீல நிறம் வெளிரா­க­வும் தொடர்ந்து அடர்த்­தி­யா­க­வும் இடம்­பெற்­றி­ருக்­கும்.

முன்­ன­தாக தேசிய தினப் பேரணி உரை­யில் பிர­த­மர் லீ, இரு சிவப்­புக் கோடு­கள் கொவிட்-19 கிரு­மிக்­கான 'ஏஆர்டி' விரை­வுப் பரி­சோ­த­னை­யில் தெரி­யக்­கூ­டிய இரண்டு சிவப்­புக் கோடு­க­ளைக் குறிப்பதாக இருக்கும் என்று நகைச்­சு­வை­யா­கக் கூறி­னார்.

கிரு­மிப் பர­வ­லுக்கு எதி­ரான போரில் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புப் பணி­யா­ளர்­கள், பொதுச் சேவை அதி­கா­ரி­கள், அரசு சாரா அமைப்­பு­கள், பல்­வேறு பின்­ன­ணி­க­ளைக் கொண்ட தனி நபர்­கள் எனப் பல­ரும் பங்­க­ளித்­த­தைப் பிர­த­மர் நினை­வு­கூர்ந்­தார்.

இவர்­களில் ஓய்வு பெற்ற பிற­கும் தொண்­டூ­ழிய அடிப்­ப­டை­யில் பங்­க­ளிக்க முன்­வந்­தோ­ரும் அடங்­கு­வர். விரு­துக்­கு­ரி­யோர் இந்த ஆண்டிறு­தி­யில் அறி­விக்­கப்­ப­டு­வர் என்­றும் அடுத்த ஆண்டு விருது வழங்­கும் நிகழ்ச்சி நடை­பெ­றும் என்­றும் அவர் கூறி­யி­ருந்­தார்.