பயணப் பைகளின் தடமறியும் சேவை

பயணப் பைகளின் தடமறியும் சேவை

2 mins read
1dedcb15-52be-4bda-adff-80c2d6e1d3de
-

சாங்கி விமான நிலை­யத்­திற்கு வந்து செல்­லும் பய­ணி­கள் தங்­கள் பய­ணப்­ பை­க­ளின் தட­ம­றி­யும் சேவை­யைப் பயன்­ப­டுத்த இய­லும்.

இம்­மா­தம் 12ஆம் தேதி அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட சிறப்­புச் சேவை இத­னைச் சாத்­தி­ய­மாக்­கு­கிறது.

முதற்­கட்­ட­மாக 35 விமான நிறு­வ­னங்­க­ளின் பய­ணி­க­ளுக்கு மட்­டும் இந்­தச் சேவை வழங்­கப்­படு­கிறது.

சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ், ஃபின் ஏர், ஜெட்ஸ்­டார் ஏஷியா, ஏர் இந்­தியா போன்­றவை இவற்­றில் சில.

இவ்­வி­மான நிறு­வ­னங்­க­ளின் சேவை­க­ளைப் பயன்­ப­டுத்தி சாங்கி இரண்­டாம் மூன்­றாம் முனை­யங்­களில் இருந்து கிளம்­பும் பய­ணி­களும் இங்கு வரும் அல்­லது இடை­வழி மாறும் பய­ணி­களும் இச்­சே­வை­யைப் பயன்­படுத்த முடி­யும்.

இந்த ஆண்­டுத் தொடக்­கத்­தில் விமா­னப் போக்­கு­வ­ரத்­துத் துறை உல­க­ளா­விய நிலை­யில் கடு­மை­யான ஆள்­பற்­றாக்­கு­றை­யைச் சந்­தித்­தது. இத­னால் பய­ணப் ­பை­கள் வந்து சேர்­வ­தில் தாம­தம், அவை காணா­மற்­போ­தல், விமா­னச் சேவை­கள் ரத்து செய்­யப்­ப­டு­தல் எனப் பய­ணி­கள் பல­வகை இன்­னல்­களுக்கு ஆளா­யி­னர்.

இவ்­வே­ளை­யில் சாங்கி விமான நிலை­யக் குழுமம் அறி­மு­கம் செய்­யும் இப்­பு­திய சேவை பய­ணி­கள் தங்­கள் பய­ணப்­ பை­களின் நில­வ­ரம் குறித்து அறிந்து­கொள்ள உத­வு­கிறது.

மோச­மான வானி­லை­யால் பய­ணப்­ பை­கள் வந்­து­சேர்­வது தாம­த­மா­னால் பய­ணி­கள் அது­கு­றித்த அண்­மைத் தக­வல்­க­ளைப் பெற்­றுக்­கொள்ள இது கைகொ­டுக்­கிறது.

ஊழியர்களுக்கு இடையே முதலில் சோதிக்கப்பட்ட பிறகு இப்போது பயணிகளிடம் இரண்­டாம் கட்­ட­மா­கச் சோதிக்­கப்­படும் இந்­தச் சேவையை 'ஐசாங்கி' செய­லி­யின் வாயி­லா­கப் பயன்­படுத்­த­லாம்.

சாங்கி விமான நிலை­யத்­தின் முதல் மற்­றும் நான்­காம் முனை­யங்­களில் அடுத்த ஆண்­டுத் தொடக்­கத்­தில் இங்கு வரும் பய­ணி­கள் இந்­தச் சேவை­யைப் பயன்­ப­டுத்த இய­லும். படிப்­ப­டி­யாக இச்­சே­வை­யைப் பயன்­ப­டுத்­தும் விமான நிறு­வ­னங்­க­ளின் எண்­ணிக்கை உயர்த்­தப்­படும்.

பய­ணத்­தின்­போது தங்­கள் பய­ணப் ­பை­கள் எங்கு இருக்­கின்­றன என்­பதை அறிந்­து­கொள்­வ­தன் மூலம் பய­ணி­கள் நிம்­ம­தி­யா­கப் பய­ணம் மேற்­கொள்ள உத­வு­வதே நோக்­கம் என்று குழு­மம் கூறி­யது.

பய­ணப்­ பை­க­ளின் தட­ம­றி­யும் சேவையை ஏற்­கெ­னவே டெல்டா ஏர்­லைன்ஸ், கொரி­யன் ஏர் போன்ற விமான நிறு­வ­னங்­கள் வழங்­கி­வ­ரு­கின்­றன. இருப்­பி­னும் தென்­கி­ழக்­கா­சி­யா­வில் முதலாவதாக இங்குதான் இச்­சேவை வழங்­கப்­ப­டு­கிறது என்று சாங்கி விமான நிலை­யக் குழு­மம் தெரி­வித்­தது.

பங்­கேற்­கும் விமான நிறு­வனங்­க­ளின் முழுப்­பட்­டி­யலைத் தெரிந்துகொள்ள குழு­மத்­தின் இணை­யத்­த­ளத்தை நாடலாம்.