மது­பான புட்டியை உயர்­மா­டி­யில் இருந்து வீசிய ஆட­வ­ரின் சிறைத்­தண்­டனை குறைப்பு

மது­பான புட்டியை உயர்­மா­டி­யில் இருந்து வீசிய ஆட­வ­ரின் சிறைத்­தண்­டனை குறைப்பு

1 mins read
df45b1d2-acb2-401e-8c07-18c4f2174f48
-
multi-img1 of 2

ஆண்ட்ரூ கோஸ்­லிங் எனும் 50 வயது ஆட­வர் கூட்­டு­ரிமை வீட்­டின் ஏழாம் மாடி­யில் இருந்து 'ஒயின்' போத்­தலை வீசி­யெ­றிந்­த­தில் நசி­யாரி சுனி எனும் 73 வயது முதி­ய­வர் மாண்­டார்.

ஆஸ்­தி­ரே­லி­ய­ரான கோஸ்­லிங் கூட்­டு­ரிமை வீட்டு வளா­கத்­திற்­குள் 'பார்­ப­கியூ' முறை­யில் விருந்து உண்­ணக் கூடி­யி­ருந்த மலாய் முஸ்­லிம்­கள்­மீது போத்­தலை வீசி­னார். அது முதி­ய­வ­ரின் தலை­யில் விழுந்து பின்­னர் அவ­ரது 69 வயது மனைவி நசிமா சிட்­ரி­யின் தோள்­பட்­டை­யில் காயம் ஏற்­ப­டுத்­தி­யது.

சம்­ப­வம் 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி ஸ்பாட்­டிஸ்­வூட் ரோட்­டில் உள்ள ஸ்பாட்­டிஸ்­வூட் 18 எனும் கூட்­டு­ரிமை வீட்டு வளா­கத்­தில் நடந்­தது.

மர­ணம் விளை­விக்­கும் வகை­யில் போத்­தலை வீசி­யது, மூதாட்­டிக்குக் காயம் ஏற்­ப­டுத்­தி­யது ஆகி­யவை தொடர்­பான குற்­றச்­சாட்­டு­களை இவ்­வாண்டு பிப்­ர­வ­ரி­யில் கோஸ்­லிங் ஒப்­புக்­கொண்­டார்.

அதை­ய­டுத்து ஏப்­ரல் 8ஆம் தேதி அவ­ருக்கு ஐந்­தரை ஆண்­டு­கள் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது. கோஸ்­லிங்­கின் நட­வடிக்கை முஸ்­லிம்­கள்­மீ­தான வெறுப்பை வெளிப்­ப­டுத்­தி­ய­தா­க­வும் சமய அடிப்­ப­டை­யி­லான மோச­மான செயல் என்­றும் அர­சாங்க வழக்­க­றி­ஞர்­கள் கூறி­யி­ருந்­த­னர்.

அத­னை­ய­டுத்து கோஸ்­லிங் மேல்­மு­றை­யீடு செய்தார். யோசிக்காமல் செய்த செய­லால் மர­ணம் ஏற்­ப­டு­மா­யின் அதற்கு அதி­க­பட்­ச­மாக ஐந்­தாண்­டுச் சிறைத்­தண்­டனை மட்­டுமே விதிக்க முடி­யும் என்­பதை அவ­ரது வழக்­கறி­ஞர் சுட்­டிக்­காட்­டி­னார்.

வழக்கு தொடர்­பான அனைத்து விவ­ரங்­க­ளை­யும் நன்கு ஆராய்ந்த பிறகு கோஸ்­லிங்­கின் தண்­ட­னையை ஆறு மாதம் குறைத்து ஐந்­தாண்­டுச் சிறைத்­தண்­ட­னை­யாக நீதி­பதி நேற்று அறிவித்தார்.