மருத்துவக் கருவிகளைத் தயாரிக்கும் பயோசென்சார்ஸ் இன்டர்வென்ஷனல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த ஆடவர் மேலும் மூவருடன் சேர்ந்து செய்த கூட்டுச் சதியால் நிறுவனத்திற்கு $877,000 இழப்பு ஏற்பட்டது.
சுவா போ மெங், 2014 ஜனவரி முதல் 2016 ஏப்ரல் வரை, இந்த மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டார். $6 மில்லியன் தொடர்பான மோசடியில் ஈடுபட்டது குறித்த இரண்டு குற்றச்சாட்டுகளை நேற்று அவர் ஒப்புக்கொண்டார். எஞ்சிய தொகை தொடர்பான மூன்றாவது குற்றச்சாட்டு தண்டனை விதிக்கும்போது கருத்தில் கொள்ளப்படும்.
கூட்டுச் சதியில் ஈடுபட்டோரில் ஒருவர் பயோசென்சார்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்தவர். மற்ற இருவரும் 'யுபிக்பே;, 'ஜேசிஎஸ்' ஆகிய வெளி நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள். சுவாவிற்கு அடுத்த மாதம் 26ஆம் தேதி தண்டனை விதிக்கப்படும்.

