காலியாகவுள்ள 'பிடிஓ' வீடுகள் இணையம் வழியாக விற்பனை

காலியாகவுள்ள 'பிடிஓ' வீடுகள் இணையம் வழியாக விற்பனை

2 mins read
396fe602-6a58-4c6a-a89d-86cc62ccdab5
-

தேவைக்­கேற்­பக் கட்­டித் தரப்­படும் (பிடிஓ) வீடு­களில் குறைந்­தது மூன்று வீடு­கள் சொத்து இணை­யத்­த­ளங்­களில் விற்­ப­னைக்­கா­கப் பட்­டி­ய­லி­டப்­பட்­டுள்­ளன.

அவ்­வீ­டு­கள் புதுப்­பிக்­கப்­ப­ட­வில்லை என்­றும் அவற்­றில் இதற்­கு­முன் எவ­ரும் வசித்­த­து­போல் தெரி­ய­வில்லை என்­றும் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி கூறு­கிறது.

பிடிஓ வீடுகளை வாங்­கு­வோர் குறைந்­த­பட்­சம் ஐந்­தாண்­டு­க­ளுக்கு அவ்­வீட்­டில் கட்­டா­யம் குடி­யி­ருக்க வேண்­டும் என்­பது வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக விதி­முறை.

ஐந்­தாண்டுக் காலத்­திற்­குள் குடி­யே­றா­மல், மீண்­டும் புத்­தம் புதிய வீடாக மறு­விற்­ப­னைச் சந்­தை­யில் விற்­கும் நோக்­கில் பிடிஓ வீடு­களை வாங்க முடி­யாது என்று தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெஸ்­மண்ட் லீ கடந்த திங்­கட்­கி­ழ­மை­ தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் தெரி­வித்­து இருந்­தார்.

உரி­மை­யா­ளர்­கள் குறைந்­த­பட்ச குடி­யி­ருப்­புக் காலத்தை நிறை­வேற்ற முடி­யா­வி­டில், அவ்­வீடு கழகத்தி­டம் திரும்ப ஒப்­ப­டைக்­கப்­பட வேண்­டும் என்­றும் அதன்­பின் அவ்­வீடு எஞ்சிய வீடு­க­ளுக்­கான விற்­பனை நட­வடிக்­கை­யில் சேர்க்­கப்­படும் என்­றும் திரு லீ அப்­ப­தி­வில் குறிப்­பிட்­டி­ருந்­தார்.

"அப்­படி இல்­லை­யெ­னில், வீவக விதி­மு­றை­களை மீறி­ய­தா­கக் கரு­தப்­ப­ட­லாம். அதன் தொடர்­பில் வீவக விசா­ரிக்­கும்," என்­றும் அவர் கூறி­யி­ருந்­தார்.

'புராப்பர்ட்டிகுரு' இணையத் தளத்தில் அத்தகைய மூன்று வீடுகள் விற்பனைக்கு விடப்பட்டு இருந்ததைக் காண முடிந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியது.

காலியாகவுள்ள பிடிஓ வீடுகள் மறுவிற்பனைச் சந்தைக்கு வருவது குறைவுதான் என்று சொத்துச் சந்தை முகவர்கள் கூறியதாக அச்செய்தி தெரிவித்தது.

"முற்­றி­லும் காலி­யா­க­வி­ருக்­கும் வீட்டைப் பார்ப்­பது அரி­து­தான். கிட்­டத்­தட்ட நூற்­றில் ஒரு வீட்­டையே அப்­ப­டிப் பார்க்­க­லாம். வாழ்க்­கைத்­து­ணையை இழந்­தோர் அல்­லது அவ்­வீட்­டில் பேய் இருப்­ப­தா­கக் கருதி, அதில் குடி­புக மறுப்­போர் போன்­றோர் அதற்­குக் கார­ண­மாக இருக்­க­லாம்," என்று ஆரஞ்ச்டீ அண்ட் டை நிறு­வ­னச் சொத்து முக­வர் சூசன் மரியம் கூறினார்.