'எஸ்ஜி' வருகை அட்டையைச் சமர்ப்பிக்க பயணிகளுக்கு நினைவூட்டல்

'எஸ்ஜி' வருகை அட்டையைச் சமர்ப்பிக்க பயணிகளுக்கு நினைவூட்டல்

2 mins read
a5483947-c76f-4c28-9b0b-8e1db744c3dc
-

சிங்­கப்­பூ­ருக்கு வரும் விமா­னப் பய­ணி­கள் 'எஸ்ஜி' வருகை அட்­டை­யைச் சமர்ப்­பிக்­கத் தவ­றி­னால் குடி­நு­ழைவு நடை­மு­றை­யில் தாம­தத்தை எதிர்­கொள்ள நேரிடும்.

குடி­நு­ழை­வுச் சோதனை முகப்­புக்கு வரு­முன்­னர் விவ­ரங்­க­ளைச் சமர்ப்­பிக்­கா­த­வர்­கள், அட்­டை­யைச் சமர்ப்­பித்­து­விட்டு பின்­னர் மீண்­டும் வரி­சை­யில் சேர்ந்­து­கொள்ள வேண்­டும்.

சிங்­கப்­பூர்­வா­சி­கள் உள்­ளிட்ட அனைத்­துப் பய­ணி­க­ளுக்­கும் இது பொருந்­தும்.

வீண் தாம­தத்­தைத் தவிர்க்க, பய­ணத்­துக்கு மூன்று நாள்­கள் முன்பே குடி­நு­ழைவு சோத­னைச் சாவடி ஆணை­யத்­தின் இணை­யத்­த­ளம் அல்­லது 'மைஐ­சிஏ' செயலி மூலம் விவ­ரங்­க­ளைச் சமர்ப்­பிக்­கும்­படி ஆணை­யம் நினை­வூட்டி­உள்­ளது.

சிங்­கப்­பூர்­வா­சி­க­ளுக்கு இதற்கு மூன்று நிமி­டங்­க­ளுக்­குக் குறை­வான நேரமே தேவைப்­படும். வெளி நாட்­டி­ன­ருக்கு ஐந்து முதல் ஏழு நிமி­டங்­கள் பிடிக்­கும்.

கொவிட்-19 கிரு­மிப் பர­வலை முன்­னிட்டு மூடப்­பட்­டி­ருந்த எல்­லை­கள் மீண்­டும் திறக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து அனைத்­து­ல­கப் பய­ணி­க­ளின் எண்­ணிக்கை தொடர்ந்து அதி­க­ரித்­து­வ­ரும்­வே­ளை­யில் ஆணை­யத்­தின் நினை­வூட்­டல் வெளி­வந்­துள்­ளது.

முன்­ன­தாக, இணை­யத்­தில் 'எஸ்ஜி' வருகை அட்­டை­யைச் சமர்ப்­பிக்­கும் முறை காகி­தப் பயன்­பாட்­டைக் குறைக்­கும் முயற்­சி­யாக அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. பின்­னர் 2020 மார்ச் மாதத்­தில் அதில் மின்­வடி­வி­லான சுகா­தார அறி­விப்பு அம்­சம் சேர்க்­கப்­பட்­டது.

இவ்­வே­ளை­யில் வருகை அட்­டை­யைச் சமர்ப்­பிக்க பய­ணி­க­ளி­டம் கட்­ட­ணம் வசூ­லிக்­கும் சில இணை­யத்­த­ளங்­கள் குறித்து ஆணை­யம் நேற்று எச்­ச­ரித்­துள்­ளது. ஆணை­யத்­தின் இணை­யத்­தளம் அல்­லது 'மைஐ­சிஏ' செய­லி­யின் மூலம் இல­வ­ச­மாக இந்த விவ­ரங்­க­ளைச் சமர்ப்­பிக்­க­லாம் என்­பதை அது சுட்­டி­யது.

'மைஐ­சிஏ' செய­லி­யைப் பயன்­படுத்­தும்­படி பய­ணி­களை ஆணை­யம் ஊக்­கு­வித்­தது. இச்­செ­ய­லி­யில் ஒரு­முறை தனிப்­பட்ட தக­வல்­களை உள்­ளிட்­டால் அடுத்­த­டுத்த பய­ணங்­க­ளுக்கு அவற்­றைச் சேமிக்­கும் வச­தி­யும் உண்டு.

சிங்­கப்­பூர்­வா­சி­கள் தங்­கள் விவ­ரங்­களை ஆணை­யத்­தின் தர­வுத்­தளத்­தில் இருந்து தானி­யக்க முறை­யில் நிரப்­பிக்­கொள்ள இய­லும்.

தரை­வழி சோத­னைச் சாவ­டி­களில் மட்­டும் சிங்­கப்­பூர்­வா­சி­கள் வருகை அட்­டை­யைச் சமர்­பிக்­கத் தேவை­யில்லை.