சிஓஇ: பெரும்பாலான பிரிவுகளில் சரிவு

சிஓஇ: பெரும்பாலான பிரிவுகளில் சரிவு

1 mins read
c08db980-cc69-4fa0-ba81-5d9ddb3549e6
-

வாகன உரி­மைச் சான்­றி­தழ் கட்­ட­ணங்­க­ளுக்­கான (சிஓஇ) இந்த ஆண்­டின் இறுதி ஏலத்­தில் பெரும்­பா­லான பிரி­வு­களில் சரிவு பதி­வா­னது.

பெரிய கார்­க­ளுக்­கான கட்­ட­ணங்­களில் மட்­டுமே ஏற்­றம் இருந்­தது. 1,600சிசி வரை­யி­லான கார்­கள், 110 கிலோ­வாட் மின்­சக்தி கொண்ட மின்­சார வாக­னங்­கள் ஆகி­ய­வற்­றுக்­கான சிஓஇ $88,007 என்று பதி­வா­னது.

இது இரு வாரங்­க­ளுக்கு முன்­னர் பதி­வான $88,503ஐக் காட்­டி­லும் 0.6 விழுக்­காடு சரிவு.

அதிக சக்தி கொண்ட மின்­சார வாக­னங்­கள் மற்­றும் பெரிய கார்­க­ளுக்­கான வாகன உரி­மைச் சான்­றி­தழ் கட்­ட­ணங்­கள் $105,501லிருந்து $108,006 ஆகி அதி­க­ரித்­தது.

இது 2.4 விழுக்­காடு ஏற்­றம். மோட்­டார்­சைக்­கிள்­க­ளுக்­கான சிஓஇ நேற்று 3.4 விழுக்­காடு சரிந்­தது.

முந்­திய ஏலத்­தில் $12,100 எனப் பதி­வான சிஓஇ நேற்­றைய ஏலத்­தில் $11,690க்குக் குறைந்­தது.

வர்த்­தக வாக­னங்­க­ளுக்­கான சிஓ­இ­யும் 4.1 விழுக்­காடு சரிந்து $78,200 என்று முடி­வ­டைந்­தது.

இதன் முந்­திய கட்­ட­ணம் $81,501. எல்லா வாக­னப் பிரி­வு­க­ளி­லும் இதுவே ஆகப் பெரிய சரி­வா­கும்.

மோட்­டார்­சைக்­கிள் தவிர்த்த எல்லா வாக­னப் பிரி­வு­க­ளை­யும் உள்­ள­டக்­கிய பொதுப் பிரி­வுக்­கான வாகன உரி­மைச் சான்­றி­தழ் கட்­ட­ணங்­கள் 0.8 விழுக்­காடு சரிந்து $109,600 என முடி­வ­டைந்­தது.

இரு வாரங்­க­ளுக்கு முன்­னர் இது $110,524ஆக இருந்­தது.