வாகன விபத்தில் சிக்கிய 84 வயது ஓட்டுநர் ஒருவர் மருத்துவ
மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து புளோக் 82 மரின் பரேட் சென்ட்ரல் அருகே உள்ள கட்டுமானத்தளப் பகுதியில் நேற்று முற்பகல் 11 மணியளவில் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
முதியவர் ஓட்டிச் சென்ற கார், சம்பவ இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இரு மோட்டார்சைக்கிள்களுடன் மோதிய பின்னர் சாலைத் தடுப்பில் முட்டி நின்றது.
கார் மோதியது பெரிய சத்தத்தை ஏற்படுத்தியது. அந்தச் சத்தம் கட்டுமானத் தளத்தில் ஏதோ ஒரு பெரிய பொருள் விழுந்ததாக முதலில் தாங்கள் கருதியதாக சம்ப வத்தை நேரில் பார்த்தவர்கள் ஷின் மின் செய்தித்தாளிடம் கூறினர்.
பின்னர் விபத்தில் சிக்கிய காரிலிருந்து முதியவர் வெளியேறியதைத் தாங்கள் கண்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். அந்த ஓட்டுநர் சுயநினைவுடன் ராஃபிள்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
இன்னொரு சம்பவத்தில், குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய சந்தேகத்தில் 30 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் ஓட்டிச் சென்ற வேன் கட்டுப்பாட்டை இழந்து, அங் மோ கியோ அவென்யூ 5 - ஹவ்காங் அவென்யூ 4 சந்திப்பில் உள்ள மின்சாரப் பெட்டி, போக்குவரத்து விளக்கு கம்பம் ஆகியவற்றின் மீது மோதி அவற்றைச் சாய்த்ததாக காவல்துறை தெரிவித்தது.
இச்சம்பவம் திங்கட்கிழமை விடி யற்காலை 2 மணியளவில் நிகழ்ந்ததாகவும் குடிபோதையில் இருந்த ஓட்டுநர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் அது கூறியது.
இரு சம்பவங்கள் தொடர்பாக வும் விசாரணை நடைபெறுகிறது.

