பாதுகாவலர்கள் பலருக்கு பணியிலிருந்து விலக எண்ணம்

பாதுகாவலர்கள் பலருக்கு பணியிலிருந்து விலக எண்ணம்

2 mins read
ae657548-268a-4fad-9055-1d12703edcd0
-

வேலை கிடைப்­பது சிர­ம­மாக இருந்­தா­லும் தற்­போ­தைய வேலை­யி­

லி­ருந்து வில­கு­வது குறித்து பத்­தில் ஆறு பாது­கா­வ­லர்­கள் பரி­சீ­லித்து வரு­வ­தாக பாது­கா­வ­லர்­கள் தொழிற்­சங்­கம் நடத்­திய ஆய்­வில் தெரி­ய­வந்­துள்­ளது.

சிங்­கப்­பூர் சமூக அறி­வி­யல் பல்­க­லைக்­க­ழ­கத்­து­டன் இணைந்து இந்த ஆய்வு நடத்­தப்­பட்­டது.

பாது­கா­வ­லர் துறை தொடர்­பாக நடத்­தப்­படும் நீண்­ட­கால ஆய்­வின் ஒரு பகு­தி­யாக இந்த ஆய்­வின் முடி­வு­கள் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன.

சம்பள உயர்வு, பதவி உயர்வு ஆகி­யவை தொடர்­பான எதிர்­பார்ப்­பு­கள் நம்­பிக்­கை­யூட்­டும் வகை­யில் இல்­லா­தது இதற்கு ஒரு கார­ணம் என்று அறி­யப்­ப­டு­கிறது.

அது­மட்­டு­மல்­லாது, பணி­யில் இருக்­கும்­போது ஏதே­னும் ஒரு விதத்­தில் தாங்­கள் துன்­பு­றுத்­தல்­

க­ளுக்கு ஆளா­வ­தாக பத்­தில் நான்கு பாது­கா­வ­லர்­கள் குறை­பட்­டுக்­கொண்­ட­னர்.

துன்­பு­றுத்­தல் தொடர்­பாக அதி­ருப்­திக் குரல் எழுப்­பி­யுள்ள பாது­கா­வ­லர்­க­ளின் எண்­ணிக்கை கடந்த ஆண்­டைக்காட்­டி­லும் இவ்­வாண்டு அதி­கம்.

சிங்­கப்­பூ­ரில் தற்­போ­தைய நில­

வ­ரப்­படி 265 முக­வை­க­ளைச் சேர்ந்த கிட்­டத்­தட்ட 40,000 பாது­கா­வ­லர்­கள் உள்­ள­னர்.

கூடிய விரை­வில் இன்­னொரு வேலைக்கு மாறத் தயா­ராக இருப்­ப­தாக ஆய்­வில் பங்­கெ­டுத்த பாது­கா­வ­லர்­களில் 66.6 விழுக்­காட்­டி­னர் உறு­தி­யு­டன் தெரி­வித்­த­னர்.

இந்த விகி­தம் கடந்த ஆண்­டில் 43.1 விழுக்­கா­டாக இருந்­தது.

பாது­கா­வ­லர் பணி நிலை­யா­ன­தல்ல என்ற உணர்வு 12.5 விழுக்­காட்­டி­லி­ருந்து 6.2 விழுக்­கா­டா­கக் குறைந்­துள்­ள­போ­தி­லும் அந்த வேலை­யி­லி­ருந்து விலகத் திட்­ட­

மி­டு­வோ­ரின் எண்­ணிக்கை ஏற்­றம் கண்­டுள்­ளது.

சம்­ப­ளம் படிப்­ப­டி­யாக உயர்த்­தப்­படும் முறை­யின்­கீ்ழ் பாது­கா­வ­லர்­க­ளின் ஊதி­யம் படிப்­ப­டி­யாக உயர்ந்­துள்­ள­தா­க­வும் இத­னால் அப்­பணி குறித்து முத­லா­ளி­கள், வாடிக்­கை­யா­ளர்­க­ளின் நிலைப்­பாடு மாறி­யி­ருப்­ப­தா­க­வும் நேற்­றைய செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் பாது­கா­வ­லர் தொழிற்­சங்­கத்­தின் நிர்­வா­கச் செய­லா­ளர் ஸ்டீவ் டான் தெரி­வித்­தார்.

பாது­கா­வ­லர்­க­ளின் மாதச்

சம்­ப­ளம் கடந்த ஆண்டு $1,400ஆக இருந்­தது. இவ்­வாண்டு அது $1,442ஆக உயர்ந்­தது.

அடுத்த ஆண்டு அது $1,650ஆக­வும் 2024ஆம் ஆண்­டில் பாது­கா­வ­லர்­க­ளின் சம்­ப­ளம் $2,650 ஆக­வும் ஏற்­றம் காணும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

2024ஆம் ஆண்­டி­லி­ருந்து பாது­கா­வ­லர்­கள் கூடு­தல் நேர ஊதி­யம் வழங்­கப்­ப­டாது. மாறாக, அவர்­

க­ளுக்கு மொத்த சம்­பள அடிப்­ப­டை­யில் ஊதி­யம் வழங்­கப்­படும்.

கூடு­தல் நேர ஊதி­யம் பெறு­

வ­தற்­கான வரம்பு $2,600ஆகும்.

பாது­கா­வ­லர்­க­ளின் மாதச் சம்­ப­ளம் 2024ஆம் ஆண்­டி­லி­ருந்து அதை­விட அதி­க­மாக இருக்­கும் என்­ப­தால் இந்த மாற்­றம் ஏற்­ப­டு­கிறது. இந்த மாற்றம் மூலமாகவும் பாதுகாவலர்கள் ஒருநாளுக்கு 12 மணி நேரம் வேலை செய்வதற்குப் பதிலாக எட்டு மணி நேரத்துக்கு வேலை செய்யலாம் என்றார் திரு டான்.