குழந்தைக்குப் பாதிப்பு: கிரீம் குறித்து எச்சரிக்கை

குழந்தைக்குப் பாதிப்பு: கிரீம் குறித்து எச்சரிக்கை

1 mins read
5479c6f7-e760-4301-831a-58b1e97b7843
-

சொறி தடுப்பு கிரீம் ஒன்­றைப் பயன்­ப­டுத்­திய நான்கு வயது குழந்­தைக்கு ஹார்­மோன் தொடர்­பான பிரிச்­சினை ஏற்­பட்­டது.

இதை­ய­டுத்து, தாவ் ஜு ஹுவி யி மெய் லி ஷாங் கோ ஹு லி ருவான் காவ் எனும் அந்த கிரீ­மைப் பயன்­ப­டுத்த வேண்­டாம் என்று சுகா­தார அறி­வி­யல் ஆணை­யம் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது.

மன­வு­ளைச்­சல் ஏற்­ப­டும்­போது ஏற்­படும் ஹார்­மோன் மாற்­றங்­களை இந்த கிரீம் ஏற்­ப­டுத்­து­வ­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

இதன் கார­ண­மாக உட­லின் மேற்­ப­கு­தி­யில் கொழுப்­பின் அளவு அதி­க­ரித்­தல், சிவந்த, உப்­பிய முகம், உட­லில் அள­வுக்கு அதி­க­மான முடி வளர்­வது, தோல் மெலி­வ­டை­தல் ஆகிய பிரச்­சி­னை­கள் ஏற்­ப­டக்­கூ­டும் என்று கூறப்­ப­டு­கிறது. இந்த கிரீமை அடிக்­கடி பயன்­ப­டுத்­திய குழந்­தைக்கு சுவா­சக்­கு­ழாய் தொற்று ஏற்­பட்­டதை அடுத்து, மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­டது. அங்கு நடத்­தப்­பட்ட மருத்­து­வப் பரி­சோ­த­னை­யில் குழந்­தைக்கு ஏற்­பட்ட பாதிப்பு வெளிச்­சத்­துக்கு வந்­தது.

யூனோஸ் வட்­டா­ரத்­தில் இருந்த தற்­கா­லி­கக் கடை­யில் அந்த கிரீமை குழந்­தை­யின் பெற்­றோர் வாங்கி கடந்த நான்கு மாதங்­க­ளாக அதற்­குப் பூசி­ய­

தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.