சிங்கப்பூரை மையமாகக் கொண்ட முதலீட்டாளர்கள் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் கிட்டத்தட்ட ரூ.20,000 கோடி (S$3.3 பில்லியன்) முதலீடு செய்ய இணங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தொகையைப் பயன்
படுத்தி உத்தரப் பிரதேசத்தில் தரவு நிலையங்கள், தளவாடச் சேவைகள், கல்வி நிலையங்கள் ஆகியவை அமைக்கப்படும் என்று உத்தரப் பிரதேசத்தின் அடிப்படைக் கல்வித்துறையின் முதன்மைச் செயலாளர் தீபக் குமார் தெரிவித்தார்.
கடந்த வாரம் உத்தரப் பிரதேசத்திலிருந்து அதன் நீர்வள, வெள்ளக் கட்டுப்பாடு அமைச்சர் ஸ்வதந்திரா தேவ் சிங் தலைமையிலான உயர்மட்டக் குழு சிங்கப்பூருக்கு நான்கு நாள் அதிகாரபூர்வப்
பயணம் மேற்கொண்டது.
உத்தரப் பிரதேசத்தின் தலை
நகர் லக்னோவில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 10ஆம் தேதியிலிருந்து 12ஆம் தேதி வரை உ.பி. உலகளாவிய முதலீட்டு உச்சநிலை மாநாட்டை முன்னிட்டு வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்க அம்மாநிலத்தைச் சேர்ந்த எட்டு உயர்மட்டக் குழுக்கள் 16 நாடுகளில் பயணம் மேற்கொண்டு வருகின்றன. அவற்றில் இந்தக் குழுவும் ஒன்று. இந்த உச்சநிலை மாநாட்டின் பங்காளித்துவ நாடாக சிங்கப்பூர் உள்ளது.
"இந்தப் பயணம் வெற்றிகரமாக அமைந்தது. இரு அரசாங்கங்
களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை நட்பார்ந்த முறையிலும் அதிகப் பலன் தரும் விதமாகவும் இருந்தது," என்று அமைச்சர் குமார் தெரிவித்தார். சிங்கப்பூருக்கும் உத்தரப் பிரதேசத்துக்கும் இடையே இருக்கும் ஒத்துழைப்பு வாய்ப்புகள் தொடர்பாக வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங், நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ ஆகியோருடன் உத்தரப் பிரதேச உயர்மட்டக் குழு கலந்துரையாடியது.

