வாழ்வில் ஒளியூட்டும் ஜாமியாவின் 'புரொஜெக்ட் ஹாப்பினஸ்'

வாழ்வில் ஒளியூட்டும் ஜாமியாவின் 'புரொஜெக்ட் ஹாப்பினஸ்'

2 mins read
8653cba6-fa53-479c-ad88-af7b05600446
-

மாதங்கி இளங்­கோ­வன்

ஜாமியா இடை­நிலை மறு­வாழ்வு நிலை­யம் 14வது முறை­யாக அதன் 'புரொ­ஜெக்ட் ஹாப்­பி­னஸ்' திட்­டத்­தின்கீழ், கிறிஸ்­து­மஸை முன்­னிட்டு திரு ராபர்ட் பேட்­டி­ரிக் லாரன்ஸ், திரு­மதி ஆண்டனி ஜோச­ஃபின்

தம்­ப­தி­ய­ன­ரின் வீட்டை புதுப்­பித்­தது.

உள்­துறை, தேசிய வளர்ச்சித் துணை அமைச்­சர் ஃபைஷல் இப்­ரா­ஹிம் புதுப்­பித்த வீட்டை ஒப்­

ப­டைக்­கும் நிகழ்­வில் நேற்று கலந்து­ கொண்­டார். தம்­ப­தி­யி­ரோடு மகிழ்ந்து பேசிய அவர், "சிங்­கப்­பூ­ரில் இன, சமய ஒற்­று­மையை இது­போன்ற முயற்­சி­கள் வலுப்­

ப­டுத்த உத­வு­கின்­றன என்­றால் அது மிகை­யா­காது," என்­றார்.

அவர் ஜாமியா இடை­நிலை மறு­வாழ்வு நிலை­யத்­தின் தொண்­டூ­ழிய முயற்­சி­களை மெச்­சி­ய­தோடு தொடர்ந்து இது­போல பண்­டிகை காலங்­களில் குடும்­பங்­க­ளுக்கு மகிழ்ச்­சி­ய­ளிக்க கேட்டுக் கொண்டார்.

வசதி குறைந்த குடும்­பங்­க­ளின் வாழ்­வில் ஒளி­யூட்ட வேண்­டு­மென்ற குறிக்­கோ­ளோடு 2019ஆம் ஆண்­டில் ஆரம்­பித்த இத்­திட்­டத்­தி­னால் 14 குடும்­பங்­கள் உதவி பெற்­றுள்­ளன.

அவ்­வி­தத்­தில், திரு ராபர்ட்­டின் வீட்­டிற்கு ஜாமியா இடை­நிலை மறு­வாழ்வு நிலை­யத்­தைச் சேர்ந்த குடி­யி­ருப்­பா­ளர்­களும் இஸ்­லா­கே­ரின் முன்­னாள் உறுப்­பி­னர்­களும் இரண்டு வாரங்­க­ளுக்கு முன்பு வந்து அவ­ருக்­கும் அவ­ரது மனை­விக்­கும் இன்ப அதிர்ச்­சியை கொடுத்­தி­ருந்­த­னர்.

அவர்­க­ளு­டைய இல்­லத்தை மாற்­றி­ய­மைப்­ப­தற்கு ஜாமியா இடை­நிலை மறு­வாழ்வு நிலை­யம் ஆத­ர­வா­ளர்­க­ளி­ட­மி­ருந்­தும் நன்­கொ­டை­யா­ளர்­க­ளி­ட­மி­ருந்­தும் மொத்­தம் $2,000 திரட்­டி­யுள்­ளது.

அத்­தொ­கை­யைக் கொண்டு தொண்­டூ­ழி­யர்­கள் நான்கு நாற்­

கா­லி­கள், இரண்டு மேசை­கள், விளக்­கு­கள் கொண்ட மின்­வி­சிறி, விளக்­கு­கள் ஆகி­ய­வற்றை வாங்கி வீட்­டில் பொருத்­தி­னர்.

அவர்­கள் வீட்­டுக்கு புது சாய­மும் பூசி­னர். அனைத்து வீட்டுப் பணி­களும் ஐந்தே நாள்­களில் செய்து முடிக்கப்பட்டன.

"எங்­கள் வீட்­டில் நட­மா­டு­வ­தற்கு அவ்­வ­ளவு இட­மில்­லாத கார­ணத்­தால் முன்­பெல்­லாம் உற­வி­னர்­

க­ளை­யும் நண்­பர்­க­ளை­யும் கிறிஸ்­து­ம­ஸுக்கு அழைக்­கும்­போது அவர்­களை சிறு சிறு குழுக்களாக வருமாறு கேட்டுக்கொள்வோம். இப்­போது புதுப்­பித்­த­லுக்கு பிறகு அதிக இடம் இருப்­ப­தால் இவ்­வாண்டு இன்­னும் அதி­க­மா­னோரை அழைக்க ஆவ­லு­டன் உள்­ளேன்," என்­றார் திரு­மதி ஜோச­ஃபின்.

திரு­மதி ஜோச­பின் கடந்த 20 ஆண்­டு­க­ளாக உட்­லண்ட்ஸ் அவன்யூ ஐந்து வட்­டா­ரத்­தி­லுள்ள மசெக பாலர் பள்ளி ஒன்­றில் ஆத­ரவு பணிக்­கு­ழு­வில் பணி­யாற்றி வரு­கி­றார்.

தம் பள்ளி மாண­வர்­க­ளுக்கு சமைத்து வரும் திரு­மதி ஜோச­பின், ஒவ்­வொரு கிறிஸ்­து­ம­ஸுக்­கும் தம் பள்­ளி­யில் பணி­பு­ரி­யும் ஆசி­ரி­யர்­க­ளுக்­கும் தம் மகன்­

க­ளுக்­கும் நண்­பர்­க­ளுக்­கும் விருந்து சமைத்­துக் கொடுப்­பார்.

முன்பு பாது­காப்பு அதி­கா­ரி­யாக பணி­பு­ரிந்த திரு ராபர்ட், 74, உடல்­

ந­லம் குன்­றிய கார­ணத்­தால் வேலை­யி­லி­ருந்து விலக நேரிட்­டது. ஆகை­யால்தான் அவ­ரது மனைவி கடு­மை­யாக உழைத்து வீட்­டுச் செல­வு­க­ளைப் பார்த்­துக்­கொள்­கி­றார்.

"ஜாமியா எங்­க­ளுக்குச் செய்த உத­வியை நாங்­கள் என்­றும் மறக்கமாட்­டோம். இவ்­வாறு என் வீட்டைத் தேர்வு செய்து வீட்டை அழ­கு­ப­டுத்­தி­யது என் மனதை நெகி­ழச் செய்­துள்­ளது. ஜாமி­யா­வின் இது­போன்ற தொண்­டூ­ழிய வேலை­க­ளி­னால் தொடர்ந்து பல குடும்­பங்­கள் மேன்­மே­லும் நன்­மை­ய­டை­யும் என நம்­பு­கின்­றேன்," என்­றார் திரு ராபர்ட்.