முதல் மூன்று தெரிவுகளில் ஒன்று கிடைத்தது

முதல் மூன்று தெரிவுகளில் ஒன்று கிடைத்தது

1 mins read
edd71445-89a0-4bc2-aa69-08b4f5188ed1
-

தொடக்­க­நிலை இறு­தித் தேர்­வுக்­குப் பிறகு முடி­வு­கள் கிடைத்­த­தும் தாங்­கள் செல்ல விரும்­பும் உயர்­நி­லைப்­பள்­ளிப் பட்­டி­யலை மாண­வர்­கள் சமர்ப்­பிக்க வேண்­டும். மொத்­தம் ஆறு தெரி­வு­கள் அவர்­க­ளுக்கு வழங்­கப்­படும்.

இந்­நி­லை­யில், கடந்த ஆண்­டில் தொடக்­க­நிலை இறு­தித் தேர்வு எழு­திய மாண­வர்­க­ளின் 80 விழுக்­காட்­டுக்­கும் மேற்­பட்­டோ­ருக்கு அவர்­க­ளது முதல் மூன்று தெரி­வு­களில் ஏதே­னும் ஒரு பள்ளி கிடைத்­த­தாக கல்வி அமைச்சு தெரி­வித்­தது.

தேர்வு எழு­திய மாண­வர்­களில் 90 விழுக்­காட்­டி­ன­ருக்­கும் மேற்­பட்­டோ­ருக்கு தங்­க­ளது ஆறு தெரி­வு­களில் ஒன்று கிடைத்­தது.

பள்­ளி­யில் ஒரே ஒரு இடம் மட்­டும் எஞ்­சி­யுள்ள நிலை­யில் அதற்கு ஒன்­றுக்கு மேற்­பட்ட விண்­ணப்­ப­தா­ரர் இருந்­தால் குடி­யு­ரிமை, அந்­தப் பள்ளி அவர்­

க­ளது தெரி­வுப் பட்­டி­ய­லில் எத்­த­னை­யா­வது இடத்­தில் உள்­ளது போன்­றவை கருத்­தில் கொள்­ளப்­பட்டு முடி­வெ­டுக்­கப்­பட்­ட­தாக அமைச்சு கூறி­யது.

ஏறத்­தாழ 10 விழுக்­காடு மாண­வர்­க­ளுக்­கான உயர்­நி­லைப்­பள்ளி கணினி மூலம் நடத்­தப்­பட்ட குலுக்­கல் முறை­யின் வழி நிர்­ண­யிக்­கப்­பட்­டது.

உயர் மதிப்­பெண்­கள் பெற்ற மாண­வர்­க­ளுக்கு முத­லில் அவர்­

க­ளது முதல் தெரிவு வழங்­கப்­பட்­ட­தாக கல்வி அமைச்­சின் இணை­யப்­பக்­கத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது. ஆறு தெரி­வு­களில் ஒரு பள்­ளிக்­கூடமும் கிடைக்­காத பட்­சத்­தில் சம்­பந்­தப்­பட்ட மாண­வ­ரின் வீட்­டுக்கு அரு­கில் உள்ள பள்­ளி­களில் எதில் இடம் உள்­ளதோ அதற்கு அனுப்­பப்­ப­டு­வார் என்று தெரி­விக்­கப்­பட்­டது.