தடுப்பூசி நிலையங்களுக்கான நேர நீட்டிப்பு தொடர்கிறது

தடுப்பூசி நிலையங்களுக்கான நேர நீட்டிப்பு தொடர்கிறது

2 mins read
660b8eb8-46ce-4342-905e-4dcf1a5318c0
-

சனிக்­கி­ழ­மை­களில் தடுப்­பூசி நிலை­யங்­கள் இயங்­கும் நேரம் அண்­மை­யில் நீட்­டிக்­கப்­பட்­டது.

தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வோர் எண்­ணிக்கை அதி­க­மாக இருப்­ப­தால் இந்த நேர நீட்­டிப்பு தொட­ரும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கூட்­டுப் பரி­சோ­தனை, தடுப்­பூசி நிலை­யங்­கள் (ஜேடி­விசி), சிறா­ருக்­கான தடுப்­பூசி நிலை­யங்­கள் ஆகி­யவை சனிக்­கி­ழ­மை­களில் இயங்­கும் நேரம் காலை 9 மணி­யி­லி­ருந்து பிற்­ப­கல் 1 மணிக்­குப் பதி­லாக இரவு 7 மணி வரை நீட்­டிக்­கப்­பட்­டது.

இந்த நேர நீட்­டிப்பு இம்­மாத இறுதி வரை நடப்­பில் இருக்­கும் என்று முத­லில் தெரி­விக்­கப்­பட்­டது.

ஆனால் சனிக்­கி­ழ­மை­களில் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வோர் எண்­ணிக்கை அதி­க­மாக இருப்­ப­தால்­இந்த நேர நீட்­டிப்பு அடுத்த ஆண்டு பிப்­ர­வரி மாதம் வரை நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும் என்று சுகா­தார அமைச்சு அறி­வித்­துள்­ளது.

நாளை மறு­நா­ளி­லி­ருந்து குறிப்­பிட்ட சில பொதுச் சுகா­தா­ரத் தயார்­நிலை மருந்­த­கங்­களில் மட்­டும் நோவா­வேக்ஸ்/நோவா­சோ­விட் கொவிட்-19 தடுப்­பூசி போடப்­படும் என்று அமைச்சு கூறி­யது.

தற்­போது, அந்­தத் தடுப்­பூசி குறிப்­பிட்ட சில பொதுச் சுகா­தா­ரத் தயார்­நிலை மருந்­த­கங்­க­ளி­லும் ஜூரோங், ஈசூன் பல­துறை மருந்­த­கங்­க­ளி­லும் போடப்­ப­டு­கிறது.

இம்­மா­தம் 24ஆம் தேதிக்­குப் பிறகு இந்த வகை தடுப்­பூ­சியை ஜூரோங், ஈசூன் பல­துறை மருந்­த­கங்­களில் போட்­டுக்­கொள்ள முடி­யாது.

அடுத்த மாதம் 3ஆம் தேதி­யி­லி­ருந்து ஜூரோங் பல­துறை மருந்­த­கத்­தில் 12 வயது அல்­லது அதற்­கும் மேற்­பட்­டோ­ருக்கு இரு­வ­கைத் திறன்­கொண்ட ஃபைசர்-பயோ­என்­டெக்/கொமிர்­னாட்டி தடுப்­பூசி போடப்­படும்.

ஈசூன் பல­துறை மருந்­த­கத்­தில் ஆறு மாதக் குழந்­தை­கள் முதல் நான்கு வயது சிறு­வர்­கள் வரை மொடர்னா/ஸ்பைக்­வேக்ஸ் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ள­லாம்.

50 வயது அல்­லது அதற்­கும் மேற்­பட்­டோர் முன்­ப­திவு செய்­யா­மல் ஏதே­னும் ஒரு ஜேடி­வி­சிக்­குச் சென்று தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ள­லாம்.