ஸ்ரீ கிருஷ்ணன் கோயில் தலைவர் ப. சிவராமன் காலமானார்

ஸ்ரீ கிருஷ்ணன் கோயில் தலைவர் ப. சிவராமன் காலமானார்

2 mins read
a1ac0567-48f3-44d7-aa57-72c97ec43b47
-

மோன­லிசா

ஸ்ரீ கிருஷ்­ணன் கோயி­லின் தலைவர் திரு ப. சிவ­ரா­மன் (படம்) நேற்றுக் காலை கால­மா­னார். அவ­ருக்கு வயது 76.

இன்று மாலை அவ­ரது நல்லுடல் தக­னம் செய்­யப்­படு­கிறது. அவ­ர் தம் மனைவி, மக­ன், மகள், நான்கு பேரப் பிள்ளைகள் மற்­றும் குடும்­பத்­தி­னர் ஆகி­யோரை விட்­டுச் செல்­கி­றார்.

ஸ்ரீ கிருஷ்­ணன் கோயில் 1870ஆம் ஆண்டு வாட்­டர்லூ ஸ்திரீட்­டில் நிறு­வப்­பட்­டது. 1935ஆம் ஆண்டு முதல் இக்­கோ­யில் திரு சிவ­ரா­ம­னின் தந்தையும் பிரபலமான சமூகத் தலைவர்களில் ஒருவரும் வள்ளலுமான திரு பக்­கி­ரி­சாமி பிள்­ளை­யின் தலை­மை­யில் இயங்­கி­யது.

1984ஆம் ஆண்­டு திரு பக்­கிரி­சாமி பிள்­ளை­யின் மறைவைத் தொடர்ந்து, அவ­ரு­டைய மகன் திரு சிவ­ரா­மன் இக்­கோ­யி­லின் தலை­மைப் பொறுப்பை ஏற்­றுக்­கொண்­டார்.

அவ­ரின் காலத்­தில் இக்­கோ­யி­லில் 1985ஆம் ஆண்டு முதல் 1989ஆம் ஆண்டு வரை விரி­வான சீர­மைப்­புப் பணி­கள் பல மேற்­கொள்­ளப்­பட்­டன. 1989ஆம் ஆண்டு இக்­கோ­யில் பிர­மாண்ட குட­மு­ழுக்­கும் கண்­டது.

திருக்கோயில் பணிகளுக்கு அப்பால், திரு சிவராமன் தம்முடைய வாழ்­நா­ளில் பல்­வேறு சமூக தொண்­டு­களையும் ஆற்­றி­யுள்­ளார்.

குறிப்­பாக, 2012ஆம் ஆண்­டில் ஸ்ரீ கிருஷ்­ணன் கோயில் கல்வி உத­வித்­தொகை திட்­டத்­தைத் தொடங்­கி­னார். இத்­திட்­டத்­தின் மூலம் திரட்­டப்­படும் நிதி, குறைந்த வரு­மா­ன குடும்­பத்­தைச் சேர்ந்த தொழில்­நுட்­பக் கல்­விக் கழக மாண­வர்­க­ளுக்­கும் பல்­க­லைக்­க­ழக மாண­வர்­களுக்­கும் உத­வு­கிறது.

"ஏறத்­தாழ 150 ஆண்­டு­க­ளுக்­கும் மேலாக திரு பக்கிரிசாமிப் பிள்ளை பரம்பரை சிங்­கப்­பூ­ருக்கு தொண்­டாற்றி வரு­கின்­ற­னர். அவ்­வ­கை­யில் சிங்­கப்­பூ­ரி­லுள்ள இந்து கோயில்­கள் அமைப்­பு­க­ளுக்கு மூத்த தொண்­டூ­ழி­ய­ரா­க­வும் ஆலோ­ச­க­ரா­க­வும் இருந்து வந்த இவ­ரு­டைய இழப்பை ஈடு­கட்ட இய­லாது," என்று மிகுந்த வருத்­தத்­து­டன் கூறி­னார் இந்து அறக்­கட்­டளை வாரிய தலைமை நிர்­வாக அதி­காரி த. ராஜ­சே­கர்.

"என்­னு­டைய 40 ஆண்டு கால நெருங்­கிய நண்­பரை இழந்­து­விட்­டேன். அமை­தி­யான, எளி­மை­யான சுபா­வத்­து­டன் தன்­ன­டக்­கத்­து­டன் பழ­கக்­கூ­டி­ய­வர். தன்­னு­டைய மொத்த வாழ்­வை­யும் பொதுப்­பணிக்­கா­கவே அர்ப்­ப­ணித்­தார்.

"இந்து கோயில்­க­ளின் நிர்­வா­கத்­தி­லும் சமூ­கப் பணி­க­ளி­லும் அனை­வ­ருக்­கும் ஒரு சிறந்த வழி­காட்­டி­யாக வாழ்ந்து சென்­றி­ருக்­கி­றார்," என்று கூறி­னார் இந்து ஆலோ­சனை மன்­றத்தின் தலை­வர் ராஜன் கிருஷ்­ணன்.

'ஜஸ்டிஸ் ஆஃப் பீஸ்' எனப்படும் சமா­தானத் தூத­ரா­க­வும் பணி­யாற்­றி­யுள்ள இவர், பல திரு­ம­ணங்­களை முன்­னின்று நடத்தி வைத்­துள்­ளார்.

மேலும் 2021ஆம் ஆண்­டுக்­கான தேசிய தின விருது விழா­வில்­பொதுச் சேவை பதக்­கத்­தை­யும் பெற்­றுள்­ளார் என்­ப­தும் குறிப்­பி­டத்­தக்­கது.

இன்று மாலை 4.30 மணிக்கு 17, ஜலான் எலோக், சிங்­கப்­பூர் 229055 எனும் முக­வ­ரி­யி­லுள்ள இவ­ரின் இல்­லத்­தி­லி­ருந்து புறப்­படும் திரு சிவராமனின் நல்­லு­டல், மண்­டாய் தக­னச்­சாலை மண்­ட­பம் 3ல் மாலை 6 மணி­ய­ள­வில் தக­னம் செய்­யப்­படும் என்று குடும்­பத்­தார் தெரி­வித்­த­னர்.