குறைந்தது ஒரு மில்லியன் வெள்ளி பறிக்கப்பட்ட மோசடிகள்

குறைந்தது ஒரு மில்லியன் வெள்ளி பறிக்கப்பட்ட மோசடிகள்

1 mins read

உரிமமின்றி இயங்கும் கடன் தரும் நிறுவனங்கள், பிற நாடுகளுக்குப் பணம் அனுப்பும் சேவைகள் ஆகியவை தொடர்பிலான மோசடிகளில் இவ்வாண்டு இதுவரை குறைந்தது ஒரு மில்லியன் வெள்ளி பறிக்கப்பட்டுள்ளது.

குறைந்தது 116 பேர் இத்தகைய மோசடிகளுக்கு ஆளானதாகக் காவல்துறை தெரிவித்தது.

உலகளவில் எல்லைகள் திறக்கப்பட்டுவரும் வேளையில் பல சிங்கப்பூரர்கள் மற்ற நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆகக் குறைவான அந்நியச் செலாவணி விகிதத்தைப் பல சிங்கப்பூரர்கள் நாடிவரும் சூழலில் மோசடிகள் இடம்பெற்றுள்ளன.

இதுபோன்ற மோசடிகள் குறித்து தகவல் வைத்திருப்போர் www.police.gov.sg/iwitness இணையத்தளத்தில் புகார் கொடுக்கலாம்.

மோசடிகள் குறித்து ஆலோசனை பெற பொதுமக்கள் 1800-722-6688 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கலாம் அல்லது www.scamalert.sg இணையத்தளத்தை நாடலாம்.