சட்டவிரோதமாக புகையிலைப் பொருள்களை வைத்திருப்போரைக் கண்டிக்கும் பொறுப்பில் இருந்த துணைக் காவல்தறை அதிகாரி ஒருவர் தானே அந்தத் தவறில் ஈடுபட்டார்.
குற்றவாளியான 'செர்ட்டிஸ் சிஸ்கோ ஆக்சிலியரி போலீஸ்' துணைக் காவல்துறைப் படையைச் சேர்ந்த 31 வயது மோகன் ராஜ் அகிலனுக்கு மூன்று மாதச் சிறைத் தண்டனையும் 800 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்தில் சிங்கப்பூருக்கு வரும் பயணிகள் தாமாகவே ஒப்படைக்கும் புகையிலைப் பொருள்களில் 1,000 வெள்ளி மதிப்புள்ளவற்றை மலேசியரான இவர் எடுத்துக்கொண்டிருக்கிறார்.
திருடப்பட்ட பொருளைப் பெற்றுக்கொண்டது, மாதிரி புகையிலைப் பொருளை வைத்திருந்தது ஆகியவற்றின் தொடர்பில் மொத்தம் இரண்டு குற்றச்சாட்டுகளை மோகன் ஒப்புக்கொண்டார்.

