உற்பத்தி 3.2 விழுக்காடு வீழ்ச்சியடைந்தது

உற்பத்தி 3.2 விழுக்காடு வீழ்ச்சியடைந்தது

2 mins read
c187db66-1c91-49fa-a954-55eefd55e4a4
-

சிங்­கப்­பூ­ரின் உற்­பத்தி நவம்­ப­ரில் அதி­வே­கத்­தில் சரிந்­தது. முந்­தைய ஆண்­டை­விட அது, 3.2 விழுக்­காடு குறைந்­தது.

பொரு­ளி­யல் வளர்ச்சிக் கழ­கம் வெளி­யிட்ட தர­வு­கள் இதனை தெரி­விக்­கின்­றன.

புளும்­பர்க் கருத்­துக் கணிப்­பில் பொரு­ளி­யல் நிபு­ணர்­கள் கணத் திருந்த 1.1 விழுக்­காட்­டை­விட நவம் பரில் உற்­பத்தி மோச­ம­டைந்­துள்­ளது.

நவம்­பர் மாத­த்திலும் உற்­பத்தி குறைந்­தது. இதன் தொடர்ச்­சி­யாக அக்­டோ­ப­ரில் உற்­பத்தி சரிந்­துள்­ளது.

எப்­போ­துமே ஏற்ற இறக்­க­மா­கக் காணப்­படும் உயிர்­ம­ருத்­துவ பொருள்­க­ளைத் தவிர ஒட்­டு­மொத்த உற்­பத்தி ஆண்­டுக்கு ஆண்டு அடிப்­ப­டை­யில் 4.8 விழுக்­காடு சரி­வைச் சந்­தித்­துள்­ளது.

நவம்­பர் மாத உற்­பத்­தி சரி­வுக்கு மின்­னணு உற்­பத்தி குறைந்­ததே முக்­கிய கார­ணம்.

முந்­தைய ஆண்­டை­விட மின்­னணு உற்­பத்தி மேலும் 12.4 விழுக்­காடு குறைந்­தது.

சிங்­கப்­பூ­ரின் ஏற்­று­மதி சார்ந்த உற்­பத்­தி­யில் மின்­னணு துறை­யின் பங்கு மட்­டும் 40 விழுக்­காடு. சிங்­கப்­பூ­ரின் பொரு­ளி­யல் வளர்ச்­சிக்கு மின்­ன­ணு­வி­யல் அந்த அள­வுக்கு முக்­கிய துறை­யாக விளங்­கு­கிறது.

இந்த மின்­னணு உற்­பத்­தி­யில் 80 விழுக்­காட்டை வகிக்­கும் கணினி சில்­லுத் தயா­ரிப்­பும் 14 விழுக்­காடு குறைந்­தது. இது, அக்­டோ­பர் மாதத்­தின் 1.2 விழுக்­காடு லாபத்­துக்கு பிறகு ஏற்­பட்ட சரி­வா­கும்.

உல­கில் கணினி சில்­லுத் தேவை­யில் 11 விழுக்­காட்டை சிங்­கப்­பூர் விநி­யோ­கித்து வரு­கிறது. அதா­வது சில்லு தயா­ரிப்பு சாத­னங்­களில் சிங்­கப்­பூ­ரின் பங்கு 20 விழுக்­கா­டா­கும்.

இதர மின்­னணு, உதிரி பாகங்­க­ளின் உற்­பத்­தி­யும் 21.6% குறைந்­தது. அதே சம­யத்­தில் தக­வல்­தொ­டர்பு, பய­னீட்­டா­ளர் மின்­னணு் துறை 12.1 விழுக்­காடு சரிந்­தது.

ஆனால் மின்­னணு துறை­யில் கணினி தொடர்­பான சாத­னங்­கள், தர­வு சேமிப்பு போன்­றவை மட்­டும் 9.3 விழுக்­காடு வளர்ச்சி கண்­டன.

மருந்து தயா­ரிப்­பும் அக்­டோ­ பரில் 29.3 விழுக்­காடு குறைந்­தது.

கடந்த நவம்­ப­ரில் 18.8 விழுக்­காடு வளர்ச்சி கண்ட போக்­கு­வ­ரத்து பொறி­யி­யல் துறை, அக்­டோ­ ப­ரில் 6.9 விழுக்­காடு மட்­டுமே கூடி­யது.

உல­க­ளா­விய விமா­னப் போக்கு வரத்து அதி­க­ரித்­த­தால் அதிக பரா­ம­ரிப்பு, பழு­து­பார்ப்பு பணி­கள் மேற்­கொள்­ளப்­பட்­டன. வேலை வாய்ப்­பும் கூடி­யது. இத­னால் விமா­னப் போக்­கு­வ­ரத்து துறை மட்­டும் 26.2 விழுக்­காடு வளர்ச்சி கண்­டது.

கடல்­துறை, கடல் சார்ந்த பொறி­யி­யல் பிரிவு அக்­டோ­ப­ரில் 1.8 விழுக்­காடு சரி­வுக்­குப் பிறகு நவம்­ப­ரில் 16.6 விழுக்­காடு வளர்ச்சி அடைந்­தது.

சிங்­கப்­பூ­ரின் எண்­ணெய் உற்­பத்தி நவம்­ப­ரில் 14.6% குறைந்­தது. இத்­துறை பிர­கா­ச­மாக இல்லை என்று ஏற்­கெ­னவே பொரு­ளி­யல் நிபு­ணர்­கள் எச்­ச­ரித்­த­னர்.

துல்­லிய பொறி­யி­யல் துறை­யின் உற்­பத்தி நவம்­ப­ரில் 4.2 விழுக்­காடு வளர்ச்­சி­யைப் பதிவு செய்­துள்­ளது. ரசா­யன உற்­பத்­தி­யும் நவம்­ப­ரில் 11.3 விழுக்­காடு குறைந்­தது.