சிங்கப்பூரிலிருந்து புறப்பட்ட குவான்டாஸ் விமானம் அவசரமாக தரையிறங்கியது

சிங்கப்பூரிலிருந்து புறப்பட்ட குவான்டாஸ் விமானம் அவசரமாக தரையிறங்கியது

1 mins read
a0e9d9fa-e9b0-4330-a203-66dbaa442d75
-

சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து லண்­டனை நோக்­கிப் புறப்­பட்ட விமா­னம், அவ­ச­ர­மா­கத் திருப்­பி­வி­டப்­பட்டு அஸர்­பை­ஜா­னில் தரை­யி­றங்­கி­யது.

சாங்கி விமான நிலை­யத்தின் முனை­யம் 1லிருந்து குவான்­டாஸ் 'QF1' விமா­னம், 49 நிமிட தாம­தத்­திற்­குப் பிறகு வெள்­ளிக் கிழமை அதி­காலை 12.22க்கு புறப்­பட்­டது.

லண்­டனை நோக்­கிச் சென்ற விமா­னம், தொழில்­நுட்­பக் கோளாறு கார­ண­மாக ஜார்­ஜியா மீது பறந்­து­கொண்­டி­ருந்­த­போது திருப்­பி­வி­டப்­பட்­டது.

பின்­னர் அந்த 'ஏர்­பஸ் A380' ரக விமா­னம் பாகு­வில் உள்ள அனைத்­து­லக விமான நிலை­யத்­தில் காலை 11.07 மணி­ய­ள­வில் தரை­யி­றங்­கி­யது.

விமானி அறை­யில் இருந்த விமா­னி­க­ளுக்கு கோளாறு ஏற்­பட்­ட­தற்­கான அறிகுறிகள் தென் பட்டதால் அஸர்­பை­ஜா­னில் உள்ள பாகு விமான நிலை­யத்­தில் தரை இறங்க நேரிட்­டது என்று ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் கேட்­ட­தற்கு குவான்­டாஸ் பேச்­சா­ளர் ஒரு­வர் பதி­ல­ளித்­தார்.

பய­ணம் மீண்­டும் தொடங்கு வதற்கு முன்பு விமா­னத்தை பொறி­யா­ளர்­கள் சோத­னை­யி­டு­வார்­கள். சரக்­குப் பகு­தி­யில் புகை வரு வது­போல இருந்­த­தாக விமா­னி­கள் எச்­ச­ரித்­த­தா­க­வும் அவர் கூறி­னார்.

உணர்­வுக் கரு­வி­கள் தவ­றா­கச் செயல்­பட்­டி­ருக்­க­லாம் என்று கூறிய அந்­தப் பேச்­சா­ளர், பாது­காப்பு கார­ண­மாக விமானம் திருப்பிவிடப்­பட்டு அவ­ச­ர­மாக தரையிறக்­கப்­பட்­டது என்­றார்.

சரக்­குப் பகு­தி­யில் புகை ஏற்­பட்­ட­தற்­கான ஆதா­ரம் இல்லை என்று அவர் கூறி­னார்.