செய்திக்கொத்து

செய்திக்கொத்து

1 mins read
399d2e94-a4a6-4e6c-ac43-0a88f1f871a6
-

நாடாளுமன்றம் கூடுகிறது

வரும் ஜனவரி மாதம் 9ஆம் தேதி நாடாளுமன்றம் கூடுகிறது. அன்று பிற்பகல் 1.30 மணிக்கு நாடாளுமன்றம் கூடும் என்று நாடாளுமன்ற அலுவலர் தெரிவித்தார்.

விசாரிக்கும் வருவாய் ஆணையம்

அண்­மை­யில் கட்­ட­ணங்­களை உயர்த்­திய சிங்­கப்­பூர் நிறு­வ­னங்­கள் அதற்கு விளக்­கம் அளிக்க வேண்­டும் என்று உள்­நாட்டு வரு­வாய் ஆணை­யம் வலியுறுத்தியுள்ளது.

சில நிறு­வ­னங்­கள், அடுத்த ஆண்டு மேலும் ஒரு விழுக்­காடு அதி­க­ரிக்­க­வி­ருக்­கும் பொருள் சேவை வரி­யைக் கார­ணம் காட்டி விலையை உயர்த்­து­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது. இதை­ய­டுத்து ஆணை­யம், அத்­த­கைய நிறு­வ­னங்­களை விசா­ரித்து வரு­கிறது. ஜிஎஸ்டி உயர்வை ஒரு கார­ண­மாக வைத்து நியா­ய­மற்ற முறை­யில் விலை உயர்த்­தப்­ப­டு­வதை லாபத்­திற்கு எதி­ரான குழு கடு­மை­யா­கக் கரு­து­கிறது. இத்­த­கைய சம்­ப­வங்­கள் தொடர்­பான கருத்­து­கள் தீவி­ர­மாக விசா­ரிக்­கப்­படும் என்று ஆணை­யம் எச்­ச­ரித்­துள்­ளது.

சாலைச்சந்திப்பு எளிமையாகும்

லசாடா மின் வர்த்தக தளத்திலிருந்து வாங்கிய பொருள்களைத் திருப்பியனுப்புவதற்கு தானியக்க சுய பெட்டக வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2023 ஏப்ரல் முதல் இது நடைமுறைக்கு வரும். 'பாப்டிராப்' என்ற பெட்டகத்தை சிங்போஸ்ட் உருவாக்கியுள்ளது. இந்தச் சேவையை அறிமுகப்படுத்திய நேற்றைய நிகழ்ச்சியில் வர்த்தக தொழில் துணை அமைச்சர் லோ யென் லிங் பங்கேற்றார்.