செம்ப்கார்ப் இன்டஸ்ட்ரிஸ் நிறுவனம் ஜூரோங் தீவில் 285 மெகாவாட் மணி எரிசக்தி சேமிப்பு ஆற்றலைக் கொண்ட ஆலையை நிர்மாணித்து இருக்கிறது.
அந்தச் சேமிப்பு ஆலை தென்கிழக்கு ஆசியாவிலேயே இத்தகைய அமைப்புகளில் ஆகப் பெரியது என்று அந்த நிறுவனம் நேற்று தெரிவித்தது.
ஒரு மெகாவாட் மணி என்பது ஒரு மணியில் உருவாக்கப்படும் 1,000 கிலோவாட் மின்சாரத்துக்குச் சமமானதாகும்.
ஒரு கொதிகலன் (கேத்தல்) ஒரு மணி நேரத்திற்கு சுமார் 1.5 கிலோவாட் மின்சாரத்தைப் பயன்படுத்தும்.
அந்த ஆலையில் கிட்டத்தட்ட 17,000 நாலறை வீவக வீடுகளுக்கு அன்றாடம் தேவைப்படும் மின்சாரத்தைச் சேமித்து வைக்கலாம்.

