ஆடவருக்கு ஏழு ஆண்டுகள் சிறை

ஆடவருக்கு ஏழு ஆண்டுகள் சிறை

1 mins read
c56337ea-c2b0-45c5-a474-ddffe715e6cf
-

நீதிமன்றம், நேற்று 60 வயது ஆடவர் ஒருவருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. அந்த ஆடவர், அறிவுமந்தமான தன்னுடைய 24 வயது புதல்வியிடம் தகாத முறையில் ஆபாசமாக நடந்து கொண்டார்.

அவர், டிசம்பர் 7ஆம் தேதி இரண்டு குற்றச்சாட்டுகளின் பேரில் குற்றத்தை ஒப்புக்கொண்டார். தண்டனை விதிக்கப்பட்டபோது இதர இரண்டு குற்றச்சாட்டுகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன. இந்தக் குற்றச்செயல்கள் 2019, 2020ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.