டாக்சி, வாடகை கார் துறை விரிவடைகிறது

டாக்சி, வாடகை கார் துறை விரிவடைகிறது

2 mins read
5e32a339-b756-42d1-968f-b3e1000f9e14
-

மாதாந்திர வாழ்க்கைத்தொழில் உரிமம் விண்ணப்பங்கள் கூடின

கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்­ட­தில் இருந்து டாக்­சி­களுக்கும் தனி­யார் வாட­கை கார்­க­ளுக்­கும் தேவை அதி­க­ரித்து இருக்­கிறது. அந்­தத் தேவையை நிறை­வேற்­றும் வகை­யில் இந்­தத் தொழில்­துறை தன்னை சரிப்­ப­டுத்­திக்­கொண்டு சீராக விரி­வ­டைந்து வரு­கிறது.

நீடித்த நிலைத்­தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்­சர் ஏமி கோர் இவ்­வாறு தெரி­வித்து இருக்­கி­றார்.

டாக்சி, வாழ்க்­கைத்தொழில் உரி­மம் கேட்டு மாதா­மா­தம் தாக்­க­லா­கும் புதிய விண்­ணப்­பங்­க­ளின் எண்­ணிக்கை இந்த ஆண்டு 950ஆக இருக்­கிறது.

இந்த எண்­ணிக்கை சென்ற ஆண்­டில் மாதம் ஒன்­றுக்கு சுமார் 650ஆக இருந்­தது.

இது ஒரு­பு­றம் இருக்க, டாக்­சி­களும் தனி­யார் வாட­கை கார்­களும் வழங்­கும் சேவை­க­ளின் எண்­ணிக்­கை­யும் சரா­ச­ரி­யாக 32,000 கூடி இருக்­கிறது.

சென்ற ஆண்­டு­டன் கணக்­கிட்டுப் பார்க்­கை­யில் இது 6% அதி­க­மா­கும்.

சிங்­கப்­பூர் எல்­லை­கள் திறக்­கப்­பட்டு இருக்­கின்­றன. முன்­பை­விட அதிக ஊழி­யர்­கள் வேலைக்­குத் திரும்­பு­கி­றார்­கள்.

இத­னால் டாக்சி, தனி­யார் வாடகை கார்­க­ளுக்­கான தேவை கூடி இருக்­கிறது என்று டாக்­டர் கோர் ஃபேஸ்புக் பக்­கத்­தில் தெரி­வித்து இருக்­கி­றார்.

இப்­போ­தைய விழா காலத்­தின்­போது டாக்சி, தனி­யார் வாட­கை கார் ஓட்­டு­நர்­க­ளின் சேவையை அங்­கீ­க­ரித்­துப் பாராட்­டும் வகை­யில் டாக்­டர் கோர் வியா­ழக்­கி­ழமை லக்கி பிளாசா சென்­றார். அங்கு அத்­த­கைய வாகன ஓட்­டு­நர்­க­ளைச் சந்­தித்து கிறிஸ்­து­மஸ் வாழ்த்­து­களைத் தெரி­வித்­தார்.

"பர­ப­ரப்­பான இந்த விழா கலத்­தில் அவ­சி­ய­மான போக்­கு­வ­ரத்­துச் சேவை­களைத் தொடர்ந்து வழங்கி நமக்கு உத­வும் வாகன ஓட்­டு­நர்­கள் அனை­வ­ருக்­கும் நன்றி கூறு­கி­றேன்," என்று ஃபேஸ்புக் பக்­கத்­தில் டாக்­டர் கோர் தெரி­வித்து இருக்­கி­றார்.