செலவு அதிகரிப்பு: 3ல் 1 பங்கினர் குறைவாக செலவு செய்ய முடிவு

செலவு அதிகரிப்பு: 3ல் 1 பங்கினர் குறைவாக செலவு செய்ய முடிவு

3 mins read
04081099-8c3e-494d-b42b-1f2fea1fc126
-

விழாக்காலத்­தின்­போது தாங்­கள் குறை­வா­கவே செல­விட திட்­டம் போடு­வ­தாக மூன்­றில் ஒரு பங்கு சிங்­கப்­பூ­ரர்­கள் ஓர் ஆய்வில் தெரி­வித்­துள்­ள­னர்.

செல­வில் மாற்­றம் இன்றி கிறிஸ்­து­மஸ் விழா­வைக் கொண்­டா­டப் போவ­தாக ஐவ­ரில் ஒரு­வர் கூறு­கி­றார். 10 சிங்­கப்­பூ­ரர்­களில் சுமார் ஒரு­வர் மட்­டுமே வழக்­கத்­தை­விட அதி­க­மாக செலவு செய்­யப்­போ­வ­தாகத் தெரி­வித்துள்ளார்.

மற்­ற­வர்­களோ, எதுவும் நிச்­ச­ய­மில்லை என்­றும் அல்­லது கிறிஸ்­துமஸ் பண்­டிகையைக் கொண்­டா­டப்­போ­வ­தில்லை என்­றும் கூறி­விட்­ட­னர்.

பிரிட்­ட­னைச் சேர்ந்த 'யூகோவ்' என்ற ஆய்வு நிறு­வ­னம், 18 வயதும் அதற்கு அதிக வய­தும் உள்ள 1,027 சிங்­கப்­பூ­ரர்­களை உள்­ள­டக்கி டிசம்­பர் 15ஆம் தேதி இணை­யம் வழி ஆய்வு நடத்­தி­யது.

அதில் இந்த நில­வ­ரங்­கள் தெரியவந்­துள்­ளன.

எந்த அள­வுக்­குச் செல­வி­டு­வீர்­கள் என்று கேட்­ட­தற்­குத் தாங்­கள் $101 முதல் $500 வரை செல­வி­டப்­போ­வ­தாக மூன்­றில் ஒரு பங்­கி­ன­ருக்­கும் அதி­க­மா­ன­வர்­கள் கூறி­னர். ஏறக்­கு­றைய பாதிப்­பேர், தாங்­கள் செல­வி­டும் தொகை $100கூட இருக்­காது என்­ற­னர்.

இவர்­களில் பாதிப்­பேர் $50 வரை­கூட செல­விட விரும்­ப­வில்லை என்­ற­னர்.

பத்­தில் ஒரு பங்­கி­னர், $501 முதல் $1,000 வரை செல­விட இருப்­ப­தாக தெரி­வித்­தனர். இரு­பது பேரில் ஒரே ஒரு­வர்­தான் $1,000க்கும் மேல் செல­வி­டப்­போ­வ­தா­கக் கூறி­னார்.

இத­னி­டையே, இது­பற்றி கருத்து கூறிய 'சிஐ­எம்பி' வங்கி பொரு­ளி­யல் வல்­லு­நர் சோங் செங் ஊன், வாழ்க்­கைச் செலவு அதி கரித்துவிட்­ட­தா­லும் கிறிஸ்துமஸ் பண்டிகையைத் தொடர்ந்து சீனப் பெரு­நாள் வரு­வ­தா­லும் இது எதிர்­பார்க்­கப்­பட்ட ஒன்றுதான் என்­று விளக்கினார்.

இந்த 2022ஆம் ஆண்டு முடி­வடை­யப்­போகிறது.

இந்­நி­லை­யில், இந்த ஆண்டு பற்றி கருத்து கூறிய சிங்­கப்­பூ­ரர்­களில், 2021ஆம் ஆண்­டைவிட இந்த ஆண்டு பர­வா­யில்லை என்று சொன்­ன­வர்­கள் அதிகம் என்று 'இப்­சோஸ்' (Ipsos) என்ற சந்தை ஆய்வு நிறு­வ­னம் நடத்­திய வேறு ஓர் ஆய்வு தெரி­விக்­கிறது.

சிங்­கப்­பூ­ரைப் பொறுத்­த­வரை இந்த ஆண்டு மோச­மான ஆண்டு என்று 57% சிங்­கப்­பூ­ரர்­கள் தெரி வித்தனர்.

கடந்த 2021ஆம் ஆண்டு பற்றி அந்த ஆண்­டில் இப்­படி கூறி­ய­வர்­கள் 80% என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

செலவு அதி­க­ரித்­து­விட்­டது. உல­கப் பொரு­ளி­யல் நில­வ­ரம் நிச்­ச­ய­மில்­லா­மல் இருக்­கிறது.

ஆகை­யால், அடுத்த ஆண்டு சிறப்­பா­ன­தாக இருக்­கும் என்று கூற­மு­டி­ய­வில்லை என தெரி­வித்­த­வர்­கள் அதி­க­மாக இருந்­த­னர்.

இந்த ஆண்­டை­விட அடுத்த ஆண்டு சிறப்­பாக இருக்­கும் என்று தெரி­வித்­தோர் 64%தான்.

இந்த விகி­தம் சென்ற ஆண்டில் 79% ஆக இருந்­தது.

இப்­சோஸ் ஆய்வு, 36 நாடு களில் சுமார் 24,000 மக்­களை உள்­ள­டக்­கி அக்­டோ­பர் 21ஆம் தேதி முதல் நவம்­பர் 4ஆம் தேதி­வரை நடத்­தப்­பட்­டது.

அமெ­ரிக்கா, கனடா, அயர்­லாந்து, இஸ்­ரேல், மலே­சியா, தென்­னாப்­பி­ரிக்கா, துருக்கி, தாய்­லாந்து, இந்­தோ­னீ­சியா முத­லான நாடு­கள் அவற்­றில் அடங்­கும்.

அடுத்த ஆண்­டில் ஊதி­யத்­தை­விட செலவு அதி­க­ரிக்­கும் என்று தாங்­கள் நம்­பு­வ­தாக 10ல் ஒன்­பது சிங்­கப்­பூ­ரர்­கள் தெரி­விக்­கி­றார்­கள்.

உலக அள­வில் பெரும்­பெ­ரும் பங்­குச் சந்­தை­கள் சரியும் என்று தாங்­கள் நம்­புவ­தா­கக் கூறிய சிங்­கப்­பூ­ரர்­கள் விகி­தம் 60% ஆக இருக்­கிறது.

உக்ரேன் போர் 2023ல் முடி­வுக்கு வரும் என்று உல­கில் சரா­சரி­யாக 40 விழுக்­காட்­டி­னர் நம்­பிக்கை கொண்­டுள்­ள­னர். அதே­போ­லவே 39% சிங்­கப்­பூ­ரர்­க­ளி­டம் இந்த நம்­பிக்கை காணப்­ப­டு­கிறது.

வரும் ஆண்­டில் ஏதோ ஒரு சச்­ச­ர­வில் அணு ஆயு­தங்­கள் ஈடு படுத்­தப்­படும் வாய்ப்பு உண்டு என்று ஏறக்­கு­றைய 56% சிங்­கப்­பூ­ரர்­கள் நினைக்­கி­றார்­கள்.

இந்த விகி­தம் முந்­திய ஆண்­டில் 16% ஆக இருந்­தது என்பது குறிப்பிடத்தக்கது.