80,000 போத்தல் மூடிகளைக் கொண்டு சாதனை

80,000 போத்தல் மூடிகளைக் கொண்டு சாதனை

1 mins read
6f1708a7-a2ee-47fd-94f8-f5149b38c02b
-

ஓய்வு பெற்­ற­வ­ரான சிம் கோ ஹுவாட் என்ற 77 வயது முதி­ய­வர், நியூ அப்­பர் சாங்கி ரோட்­டில் உள்ள புளோக் 26க்குப் பக்­கத்­தில் தரையில் 80,000 போத்­தல் மூடி­க­ளைக் கொண்டு கலை ஓவி­யப் படைப்பை உரு­வாக்கி இருக்­கி­றார்.

அன்­றா­டம் மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை கடந்த ஜூலை முதல் இந்­தப் படைப்பை அவர் வடி­வமைக்­கத் தொடங்­கி­னார்.

சிங்­கப்­பூர் மாதிரி வரை­ப­டத்­தில் தோட்­டக்­கலை நுணுக்­கங்­கள், பூக்கள் மலர்ந்து இருப்­ப­தைப் போல ஒரு தோட்­டத்தை கலைப்­ப­டைப்­பாக இவர் உரு­வாக்கி இருக்­கி­றார்.

ஈஸ்ட் கோஸ்ட் திட்­டம் என்ற திட்­டத்­தின்­கீழ் சமூ­கத்தை ஈடு­படுத்த ஈஸ்ட் கோஸ்ட் குழுத்­தொகு­தி­யின் பல்­வேறு செயல்­திட்­டங்­கள் இலக்கு நிர்­ண­யித்து இருக்­கின்­றன.

அந்­தச் செயல்­திட்­டங்­களில் ஒரு பகு­தி­யாக இந்­தக் கலைப் படைப்பு இடம்­பெ­று­கிறது. திரு சிம் பிடோக் போகைன்­வில்லா குடி­யி­ருப்­பா­ளர் குழு அனு­ம­தி­யு­டன் இதைச் செய்து இருக்­கி­றார்.

ஒரே மாதத்­தில் குடி­யி­ருப்­பா­ளர்­கள் 80,000 போத்­தல் மூடி­க­ளைச் சேக­ரித்­த­னர். அவற்றை வகை வகை­யாக திரு சிம் பிரித்து எடுத்­தார். சிமெண்ட் கல­வை­யைக் கொண்டு போத்­தல் மூடி­க­ளைப் பொருத்தி கலைப் படைப்பை உரு­வாக்கினார்.

துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட் வியா­ழக்­கி­ழமை திரு சிம்­மின் கலைப் படைப்­பைப் பார்த்­து­விட்டு, அது தன் மன­தைக் கவர்ந்­து­விட்­ட­தா­கத் தெரி­வித்­தார்.