34 ஆண்டுகளுக்கு முன் மலேசியாவில் விற்கப்பட்ட சிங்கப்பூர் மாது; பெற்றோரை தேடுகிறார்

34 ஆண்டுகளுக்கு முன் மலேசியாவில் விற்கப்பட்ட சிங்கப்பூர் மாது; பெற்றோரை தேடுகிறார்

2 mins read
df832d74-c815-45df-860a-79593a35160b
-

விக்­டோ­ரியா இங் ஹுய் மின் என்ற 34 வயது மாது இப்­போது ஊழி­யர் வளத்­துறை நிபு­ண­ராக வேலை பார்க்­கி­றார்.

அந்த மாது 34 ஆண்­டு­க­ளுக்கு முன் மலே­சி­யா­வில் சிலாங்­கூர் மாநி­லத்­தில் தர­கர் ஒரு­வர் மூல­மாக 8,000 ரிங்­கிட் பணத்­திற்கு விற்­கப்­பட்­டார்.

அவ­ருக்கு நான்கு மாதம் ஆனபோது அவரை அழைத்­துக்­கொண்டு வளர்ப்பு பெற்­றோர் சிங்­கப்­பூர் வந்­து­விட்­டார்­கள்.

அந்த மாதைத் தத்­தெ­டுத்து வளர்த்து வந்த வளர்ப்பு தாய், மூன்று மாதங்­க­ளுக்கு முன் உறக்­கத்­தி­லேயே மாண்­டு­விட்­டார்.

அவ­ரின் வளர்ப்பு தந்­தை­யும் நினை­வாற்­றல் இழந்து தாதி­யர் விடு­தி­யில் தங்கி இருக்­கி­றார்.

திரு­வாட்டி இங்­கிற்கு இரண்டு ஆண் பிள்­ளை­கள் இருக்­கி­றார்­கள். அவர்­கள் படித்து வரு­கி­றார்­கள். தான் விற்­கப்­பட்­டது பற்றி இரண்டு ஆண்­டு­க­ளுக்­கு­முன் 2020 அக்­டோ­ப­ரில் ஒரு நாள் தன்­னு­டைய வளர்ப்பு தாயா­ரி­டம் இருந்து திரு­வாட்டி இங் தெரிந்­து­கொண்­டார்.

தன்னைப் பெற்ற பெற்­றோரைத் தேடிக் கண்­டு­பி­டித்து அவர்­க­ளுடன் ஐக்­கி­ய­மா­வ­தற்கு இதுவே சரி­யான நேரம் என்று கருதி திரு­வாட்டி இங், அதற்­கான முயற்­சி­களை முன்­னெ­டுத்து இருக்­கி­றார்.

ஆனால், போதிய ஆதா­ரம் எது­வும் அவ­ரி­டம் இல்லை.

அவ­ரின் குழந்­தைப் பரு­வத்­தைக் காட்­டும் ஒரு சில படங்­கள் மட்­டும் இருக்­கின்­றன.

"எல்­லா­ரை­யும் போலவே என் மன­மும் என்னை பெற்­ற­வர்­க­ளைப் பார்க்க வேண்­டும் என்று ஏங்­கு­கிறது. என்­னு­டன் பிறந்­த­வர்­கள் எத்­தனை பேர், அவர்­களும் என் பெற்­றோ­ரும் எங்கே இருக்­கி­றார்­கள்? என்னை ஏன் விற்­றார்­கள்? என்­பது எது­வுமே தெரி­ய­வில்லை," என்று திரு­வாட்டி இங் கூறு­கி­றார்.

திரு­வாட்டி இங்கை தத்­தெ­டுத்த பெற்­றோ­ருக்குக் குழந்­தை­கள் எதுவும் கிடை­யாது. அந்­தப் பெற்­றோர்­ அன்­பாக அவரை வளர்த்து வந்­த­னர்.

சிங்­கப்­பூ­ரின் கிழக்­குப் பகு­தி­யில் கூட்­டு­ரிமை அடுக்­கு­மாடி வீடு ஒன்­றில் அவர்­கள் வசித்து வந்­த­னர். திரு­வாட்டி இங் ஆஸ்­தி­ரே­லி­யா­வின் பெர்த் நக­ரில் பொரு­ளி­யல் துறை­யில் பட்­டம் படித்­த­வர்.

அவ­ருக்கு ஒரு வகை ரத்த குறை­பாடு இருக்­கிறது.

அதா­வது ரத்­தத்­தில் இருக்­கும் சிவப்பு அணுக்­கள் முன்­ன­தா­கவே அழிந்­து­வி­டும். இத்­த­கைய ஒரு குறை­பாடு பெற்­றெ­டுத்த பெற்­றோரி­டம் இருந்­துதான் அவருக்கு வந்து இருக்க வேண்­டும் என்று மருத்து­வர்­கள் நம்­பு­கி­றார்­கள்.

தன்னைப் பெற்­றெ­டுத்­தோ­ரைச் சந்­தித்து தன் உடன்­பி­றந்­த­வர்­களு­டன் மகி­ழும் காலத்தை மிக ஆவலாக எதிர்­நோக்கி இருக்­கி­றார் திரு­வாட்டி இங்.

யாருக்­கா­வது ஏதா­வது தட­யம் தெரிந்­தால் அவர்­கள் blessed beyondcount@gmail.com இந்த முக­வ­ரி­யில் திரு­வாட்டி இங்­கு­டன் தொடர்­பு­கொள்­ள­லாம்.