சுற்றுலா: சிங்கப்பூர்வாசிகளை அதிகம் ஈர்த்துவரும் இடங்கள்

சுற்றுலா: சிங்கப்பூர்வாசிகளை அதிகம் ஈர்த்துவரும் இடங்கள்

1 mins read
b9914b30-537b-417f-bf15-9807dab26109
-

கொவிட்-19 தொற்­றுப் பர­வ­லுக்கு முன்­பி­ருந்­த­தைப் போலவே, பேங்­காக், தோக்­கியோ, பாலி ஆகி­யவை சிங்­கப்­பூர் பய­ணி­கள் ஆண்­டி­று­தி­யில் அதி­கம் செல்­லும் இடங்­க­ளா­க­த் திகழ்­கின்­றன.

மலே­சி­யத் தலை­ந­கர் கோலா­லம்­பூ­ரும் தென்­கொ­ரி­யத் தலை­நகர் சோலும் முதல் ஐந்து இடங்­களில் இருக்கும் மற்ற இரு நகரங்கள்.

பயண முன்­ப­தி­வுத் தள­மான 'எக்ஸ்­பீ­டியா' வெளி­யிட்­டுள்ள தங்கு­மி­டத் தேடல் தர­வு­க­ளின் அடிப்­ப­டை­யில், 2022 டிசம்­ப­ரி­ல் இ­ருந்து 2023 பிப்­ர­வரி வரை­யிலும் சிங்­கப்­பூர் பய­ணி­கள் அதி­கம் செல்­லும் இடங்­கள் இவை.

எல்­லைக் கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்­டுள்­ளதை அடுத்து, குறிப்­பாக சீனப் புத்­தாண்­டுக் காலத்­தில் கிழக்கு ஆசி­யா­விற்­கும் அதி­க­மா­னோர் செல்­வர் என்று எதிர்­பார்ப்­ப­தாக சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் பேச்­சா­ளர் தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் வழி­யாக தென்­கொ­ரியா, தைவான், ஜப்­பான், ஹாங்­காங் ஆகிய கிழக்கு ஆசி­யப் பகு­தி­க­ளுக்­குச் செல்­லும் பய­ணி­க­ளின் விகி­தம் கிட்­டத்­தட்ட கொவிட்-19 பர­வ­லுக்கு முன்­பி­ருந்த நிலையை நெருங்­கி­யுள்­ளது. அப்­ப­கு­தி­க­ளுக்­கான விமா­னங்­களில் 2019 நவம்­பரில் 88% இருக்­கை­கள் நிரம்­பிய நிலை­யில், இவ்­வாண்டு நவம்­ப­ரில் அவ்­வி­கி­தம் 81 விழுக்­கா­டாக இருந்­தது.

ஜப்­பா­னில், குறிப்­பாக அதன் தலை­ந­கர் தோக்­கி­யோ­வில் தங்கு­மி­டக் கட்­ட­ணங்­கள் கொவிட்-19 பர­வ­லுக்கு முன்­பி­ருந்­த­தை­விட அதி­க­மாக இருப்­ப­தாக அண்­மை­யில் அந்நாட்டிற்குத் தேனி­லவு சென்­று இ­ருந்த புது­ம­ணத் தம்­பதி­யர் 33 வயது டான் டிங் வெய்­யும் 32 வயது ரோண்டா லிம்­மும் கூறி­னர்.

இரண்டு அல்­லது மூன்று நட்­சத்­திர விடு­தி­க­ளின் சாதா­ரண அறை­களில் ஓரி­ரவு தங்க $500 செல­வா­க­லாம் என்று அவர்­கள் குறிப்­பிட்­ட­னர்.