தொழில்முனைவரின் சமூகத் தொண்டு: ஐந்து வயதில் தொடங்கியது இப்போதும் தொடர்கிறது

தொழில்முனைவரின் சமூகத் தொண்டு: ஐந்து வயதில் தொடங்கியது இப்போதும் தொடர்கிறது

3 mins read
1d8af231-2fc0-45d1-8cd5-c919b93b5bef
-

பொன்­மணி உத­ய­கு­மார்

தமது ஐந்து வய­தி­லி­ருந்து குடும்­பத்­தா­ரின் சமூ­கத் தொண்டு பய­ணத்­தில் பங்­கேற்­று­வ­ரும் திரு­வாட்டி அனுஷா அஸ்­வானி, 36, இன்று 'ஏஷி­யன் ஃபுட் நெட்­வொர்க்' நிர்­வா­கத்­திற்­குத் தலைமை தாங்­கும்­போ­தும் தொண்டு மனப்­பான்­மை­யைக் கைவி­ட­வில்லை.

அந்­நி­று­வ­னத்­தில் திரு­வாட்டி அனுஷா பொறுப்­பேற்று சில ஆண்டு­களே ஆன­போ­தும், இது­வரை கிட்­டத்­தட்ட இரண்டு டன் அரி­சி­யை­யும் 50 பெட்டி குளிர்­பா­னங்­களை­யும் 'வில்­லிங் ஹார்ட்ஸ்' அற­நி­று­வ­னம், 'ஹெச்சி­எஸ்ஏ கம்­யூ­னிட்டி சர்­வி­சஸ்', ஜாமியா சிங்­கப்­பூர் போன்ற அமைப்­பு­க­ளுக்கு அந்த ­நி­று­வ­னம் நன்­கொ­டை­யாக வழங்கி இருக்­கிறது.

இதன்­மூ­லம் வெளி­நாட்டு ஊழி­யர்­கள் மட்­டு­மின்றி, வசதி குறைந்­த­வர்­கள், முதி­ய­வர்­கள், உடற்­கு­றை­ உள்­ளோர், ஒற்­றைப் பெற்­றோர் ஆகி­யோ­ரைக் கொண்ட குடும்­பங்­கள் என 10,000க்கும் மேற்­பட்­ட­வர்­கள் பல­ன­டைந்­தி­ருக்­கி­றார்­கள்.

தமது தொண்­டூ­ழி­யப் பய­ணத்­திற்கு தம் குடும்­பத்­தில் உள்ள மாதர் உந்­து­த­லாக இருந்­துள்­ள­னர் என்று சொன்­னார் திரு­வாட்டி அனுஷா.

நைஜீ­ரி­யா­வில் வளர்ந்த இவர், சிறு­வ­ய­தில் தம் தாயா­ரு­டன் சென்று வசதி குறைந்­த­வர்­க­ளுக்கு ரொட்டி கொடுத்­ததை இன்­றும் நினை­வில் வைத்­தி­ருக்­கி­றார்.

வார இறு­தி­களி­லும் தம் குடும்­பத்­து­டன் சேர்ந்து பல சமூ­கத் தொண்டு நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­ட­தாக இவர் பகிர்ந்­து­கொண்­டார்.

அத்­து­டன், திரு­வாட்டி அனுஷா தம் குடும்­பத்­து­டன் சேர்ந்து நைஜீரி­யா­வில் சுகா­தா­ரத் திட்­டம் ஒன்­றைச் செயல்­ப­டுத்தி வரு­கி­றார். அடிப்­படை வச­தி­களின்றி பெண்­கள் கல்­வியை நிறுத்­து­வ­தைத் தவிர்க்க உத­வும் வகை­யில் அத்­திட்­டம் அமைந்­தி­ருக்­கிறது. கழி­வறை­கள், தண்­ணீர்க் குழாய் வசதி­கள் போன்­ற­வற்­றைத் தம் குடும்­பத்­தின் அற­நி­று­வ­னம் மூலம் இவர் ஏற்­ப­டுத்­தித் தந்­துள்­ளார்.

இன்று 86 வய­தி­லும் தம் பாட்டி ஓர் உத­வி­யா­ள­ரு­டன் இணைந்து வாரத்­தில் இரண்டு நாள்­கள் தாங்­களே சமைத்து, சிக்­லாப் வட்­டா­ரத்­தில் உள்ள கட்­டு­மா­னத் தளங்­களுக்­குச் சென்று வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்கு உணவு, பானங்­களை வழங்­கு­வ­தாக திரு­வாட்டி அனுஷா நெகிழ்ச்­சி­யு­டன் குறிப்­பிட்­டார்.

கொவிட்-19 தொற்­றின்­போது தம் சகோ­த­ர­ரு­டன் சேர்ந்து வலை­யொளி ஒன்றை இவர் தொடங்­கி­னார். ஆசிய வட்­டா­ரத்­தில் உள்ள சமூக நிறு­வ­னங்­க­ளின் பங்கை வெளிப்­ப­டுத்­து­வ­தற்­கும் அவர்­களின் பணி­க­ளுக்கு உரிய அங்­கீ­கா­ரம் பெற்­றுத் தரு­வ­தற்­கும் 'புரோ­ஜெக்ட் ரேரே' என்ற பெய­ரில் அந்த வலை­யொளி தொடங்­கப்­பட்டுள்­ளது.

சிங்­கப்­பூ­ரில் சமூ­கத் திட்­டங்­களி­லும் திரு­வாட்டி அனுஷா தொடர்ந்து ஈடு­பட்டு வரு­கி­றார். புக்­கிட் பாத்­தோக் வட்­டா­ரத்­தில், வீட்­டிற்கு வெளியே வசதி குறைந்­த­வர்­க­ளுக்­காக உண­வுப்­பொ­ருள்­களை­யும் மளி­கைப்பொருள்­க­ளை­யும் சக்தி என்ற சிறுமி வைக்­கத் தொடங்­கி­ய­போது, திரு­வாட்டி அனுஷா தம் நிறு­வ­னத்­தின் சார்­பாக உண­வுப்­பொ­ருள்­களை நன்­கொ­டை­யாக வழங்­கி­னார். இது­போன்று சமூ­கத் தொண்டு முயற்சி­கள் குறித்து கேள்­விப்­பட்­டால், அவற்­றுக்­குத் தம்­மால் முடிந்த அள­வில் கைகொ­டுக்க முயல்­கி­றார்.

பொரு­ளி­யல் சரி­யும்­போ­தும் அனை­வ­ருக்­கும் கட்­டுப்­ப­டி­யா­கக் கூடிய விலை­யில் பொருள்­களை விநி­யோ­கம் செய்ய வேண்­டும் என்­ப­தில் தம் நிறு­வ­னம் கவ­னம் செலுத்தி வரு­கிறது என்­றார் இவர்.

தமது நிறு­வ­னம் இறக்­கு­மதி செய்­யும் பொருள்­க­ளைக் கடைத்­தொ­கு­தி­கள் தக்­க­வி­லை­யில் விற்க வேண்­டும் என்­ப­தில் உறு­தி­யாக இருக்­கும் இவர், அத­னைக் கடைக்­கா­ரர்­க­ளி­ட­மும் வலி­யு­றுத்தி வரு­கி­றார்.

"எல்­லாரா­லும் சமூ­கத்­திற்கு ஏதோ ஒரு வகை­யில் உதவ முடி­யும். நேரம் செல­வ­ழிப்­ப­தாக இருக்­கட்­டும் அல்­லது நன்­கொடை வழங்­கு­வ­தாக இருக்­கட்­டும், நம்­மால் என்ன முடி­யும் என்று சிந்­தித்து நம் பங்­கைச் சமூ­கத்­திற்கு ஆற்­ற­லாம்," என்­கி­றார் திரு­வாட்டி அனுஷா.