மூன்றாண்டுக்குப்பின் பெய்ஜிங்கிற்கு விமானம்

மூன்றாண்டுக்குப்பின் பெய்ஜிங்கிற்கு விமானம்

1 mins read
16995602-28c6-4dcc-bbfd-b9c06146e3e5
-

கொவிட்-19 பெருந்­தொற்­றால் கடந்த 2020ஆம் ஆண்­டி­லி­ருந்து பய­ணம் தடை­பட்ட நிலை­யில், சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் வரும் 30ஆம் தேதி வெள்­ளிக்­கி­ழமை சீனத் தலை­ந­கர் பெய்­ஜிங்­கிற்கு முதல் விமா­னத்தை இயக்­க­வி­ருக்­கிறது.

கிட்­டத்­தட்ட மூன்­றாண்­டு­க­ளுக்­குப் பிறகு, இரு­வா­ரங்­க­ளுக்கு ஒரு­முறை வெள்­ளிக்­கி­ழ­மை­களில் சிங்­கப்­பூர் - பெய்­ஜிங் பய­ணி­கள் விமா­னத்தை சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் இயக்­க­வி­ருக்­கிறது.

முன்­ன­தாக, கடந்த செப்­டம்­பர் 27ஆம் தேதி பெய்­ஜிங் - சிங்­கப்­பூர் பய­ணி­கள் விமான சேவையை அந்­நி­று­வ­னம் மீண்­டும் தொடங்­கி­யது. செவ்­வாய், வெள்­ளிக்­கி­ழ­மை­களில் அவ்­வி­மா­னம் இயக்­கப்­ப­டு­கிறது.

சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் திங்­கட்­கி­ழ­மை­க­ளி­லும் சனிக்­கி­ழ­மை­க­ளி­லும் சிங்­கப்­பூர் - ஷாங்­காய் இடை­யே­யும் விமா­னங்­களை இயக்கி வரு­கிறது.

சீனா­வின் சொங்­சிங், ஷென்­ஸென், செங்டு, சியா­மென் ஆகிய நக­ரங்­க­ளுக்­கும் விமா­னங்­களை இயக்கி வரு­வ­தாக சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் நிறு­வ­னப் பேச்­சா­ளர் கூறி­னார். ஆயி­னும், சிங்­கப்­பூர் - குவாங்சோ இடை­யி­லான விமான சேவை இன்­னும் திரும்­ப­வில்லை.

"பய­ணத் தேவை­யைக் கண்­காணித்து, சாத்­தி­ய­மி­ருப்­பின் சிங்­கப்­பூர் - சீனா இடையே படிப்­ப­டி­யா­கப் பய­ணி­கள் விமான சேவை­களை மீண்­டும் தொடங்­கு­வது குறித்து அதி­கா­ரி­க­ளு­டன் அணுக்­க­மா­கப் பணி­யாற்­று­வோம்," என்­றும் அந்தப் பேச்சாளர் சொன்னார்.

கொவிட்-19 பர­வ­லை­ய­டுத்து, கடந்த 2020 மார்ச் 28ஆம் தேதி சிங்­கப்­பூர் - பெய்­ஜிங் இடையே விமான சேவை­கள் நிறுத்­தப்­பட்­டன.