இணைய மோசடிகளில் அதிகமான இளையர்

இணைய மோசடிகளில் அதிகமான இளையர்

2 mins read
b93bf06b-0d98-48d6-828b-c9b0b5ffce88
-

தண்­டனை கடு­மை­யாக்­கப்­பட்டு இருக்­கிறது என்­றா­லும் முன்­பை­விட அதிக இளை­ஞர்­கள் இணைய வர்த்­தக மோச­டி­களில் ஈடு­ப­டு­கிறார்­கள் என்று தெரி­விக்­கப்­பட்டு இருக்­கிறது.

அத்­த­கைய மோச­டி­களில் பெரும்­பாலானவற்­றில் சிக்­கி­விட்ட அப்­பா­வி­கள், இந்த ஆண்டின் முதல் ஆறு மாதத்­தில் $8.3 மில்­லி­யனை இழந்துவிட்டனர்.

மோச­டிக்­கா­ரர்­கள் பல்­வேறு பொருள்­களை விற்­ப­வர்­கள் போல விளம்­ப­ரப்­ப­டுத்தி பணத்தை வாங்­கிக்கொண்டு பொருள்­க­ளைக் கொடுக்­கா­மல் ஏமாற்­றி­விட்­ட­னர்.

இந்த ஆண்டு ஜன­வரி முதல் டிசம்­பர் வரைப்­பட்ட காலத்­தில் இடம்­பெற்ற குற்­றச்­செ­யல் தொடர்­பில் கைதா­ன­வர்­களில் ஏறக்­கு­றைய 60 விழுக்­காட்­டி­னர் 29 வய­தும் அதற்­குக் குறைந்த வய­தும் உள்­ள­வர்­கள் என்­பது காவல்­து­றை­ புள்ளி­வி­வ­ரங்­கள் மூலம் தெரி­­கிறது.

அந்­தக் கால­கட்­டத்­தில் மொத்­த­தம் 121 பேர் கைதா­யி­னர். அவர்­களில் 19 வய­தும் அதற்­கும் குறைந்த வய­துள்ள 15 இளை­யர்­களும் அடங்­கு­வர். 56 பேருக்கு வயது 20 முதல் 29 வரை.

ஏமாற்­றும் நோக்­கத்­தில் இணை­யத்­தில் சில பொருள்­களை விளம்­பரப்­ப­டுத்­தினால் அது ஓர் ஏமாற்­றுச் செய­லா­கவே கரு­தப்­படும் என்று விதர்ஸ் கத்­தார்­வோங் சட்ட நிறு­வனத்­தின் மூத்த இணை வழக்கறி­ஞர் ஜெரமி பெரேரா தெரி­வித்­தார்.

இந்­தக் குற்­றத்­திற்கு 10 ஆண்டு வரை சிறைத்­தண்­ட­னை­யும் அப­ரா­த­மும் விதிக்க முடி­யும்.

சிங்­கப்­பூ­ரில் இடம்­பெ­றும் மோசடி­களில் வேலை தொடர்­பான மோச­டி­கள் ஆக அதி­கம். போலி­யான பெய­ரில் பல­ரை­யும் ஏமாற்று­வது அடுத்த இடத்­தில் உள்­ளது.

இணைய வர்த்­தக மோச­டி­கள் 3வது இடத்­தைப் பிடித்துள்ளன.

இந்த ஆண்­டின் முதல் ஆறு மாத காலத்­தில் மெத்­தம் 2,267 இணைய வர்த்­தக மோச­டி­கள் பற்றி புகார் தெரி­விக்­கப்­பட்டன. இந்த எண்­ணிக்கை சென்ற ஆண்டு இதே கால­கட்­டத்­தில் 1,057 ஆக இருந்­தது என்­பது ஆகஸ்ட் மாதம் வெளி­யிட்ட காவல்­துறை புள்­ளி­வி­வ­ரங்­கள் மூலம் தெரி­ய­வ­ரு­கிறது.

இணைய வர்த்­தக மோச­டி­கள் அதி­க­ரித்­ததால் சிங்­கப்­பூ­ரில் ஒட்டு­மொத்­த­மாக குற்­றச்­செ­யல்­க­ளின் எண்­ணிக்­கை கூடி­விட்­டது.

கெரோ­சல், ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டெலி­கி­ராம் உள்­ளிட்ட இணை­யத்­த­ளங்­க­ளையே மோச­டிக்­கா­ரர்­கள் அதி­கம் பயன்­ப­டுத்­து­கி­றார்­கள்.

மின்­ன­ணுப் பொருள்­கள், சேக­ரித்து வைக்­கக்­கூ­டிய நினைவுப் பொருள்­கள் உள்­ளிட்ட பல­வும்­தான் அதி­க­மாக விற்­ப­னைக்­குக் கொடுக்­கப்­பட்டு ஏமாற்­றப்­ப­டு­கின்­றன.

கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24 வயது ஆட­வர் ஒரு­வ­ருக்கு ஈராண்டு சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது. அவர் 16 குற்­றங்­களை ஒப்­புக்­கொண்­டார். 40க்கும் மேற்­பட்ட அப்­பா­வி­களை ஏமாற்றி அவர்­களிடம் இருந்து சுமார் $38,000ஐ அந்த நபர் பறித்து­விட்­டார்.