முயல் புத்தாண்டை வரவேற்க பிரம்மாண்ட முறையில் ஆயத்தம்

முயல் புத்தாண்டை வரவேற்க பிரம்மாண்ட முறையில் ஆயத்தம்

2 mins read
ffd072d5-b04c-46ac-a19c-82d851b2f30b
-

சீனப் புத்­தாண்டு கொண்­டாட்­டங்­கள் இரண்­டாண்டு கொவிட்-19க்குப் பிறகு இந்த ஆண்டு மக்­கள் நேர­டி­யா­கக் கலந்து கொள்­ளும் வகை­யில் முழு மூச்­சாக இடம்­பெ­ற­வி­ருக்­கின்­றன.

முயல் ஆண்டு ஜன­வரி 22ஆம் தேதி பிறக்­கிறது. அதை வர­வேற்று கொண்­டாட ஆயத்தப் பணி­கள் நடந்து வரு­கின்­றன.

கிரேத்தா ஆயர் சதுக்­கத்­தில் ஜன­வரி 3ஆம் தேதி அதி­கா­ர­பூர்வ வீதி ஒளி­வி­ளக்கு ஏற்­றும் விழா நடக்­கும். பல்­வேறு சாலை­க­ளி­லும் ஒளி விளக்­கு­கள் பிப்­ர­வரி 19ஆம் தேதி வரை இர­வில் ஒளி­ரும்.

கிரேத்தா ஆயர் சதுக்­கத்­தில் ஜன­வரி 21 இரவு 9 மணி முதல் பின்­னி­ரவு 1 மணி வரை மேடைக் கலை நிகழ்ச்­சி­க­ளு­டன் புத்­தாண்டு வர­வேற்பு நிகழ்ச்சி நடக்­கும்.

ஜன­வரி 1 முதல் ஜன­வரி 21 வரை மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை சைனா டவுன் விழாச் சந்தை பல வீதி­களி­லும் நடக்­கும்.

முதல்­த­ட­வை­யாக ஸ்மித் ஸ்தி­ரீட்­டில் சைனா டவுன் உண­வுச் சந்தை இடம்­பெ­றும்.

ஜன­வரி 7ஆம் தேதி விழாக்­கால கருப்­பொ­ரு­ளைக் கொண்ட வார­யி­றுதி பயி­ல­ரங்­கு­கள் நடக்­கும். இரண்­டாண்­டு­க­ளுக்­குப் பிறகு பிப்­ர­வரி 3, 4ஆம் தேதி­களில் சிங்கே அணி­வ­குப்பு ஊர்­வ­லம் வெகு விம­ரி­சை­யாக நடை­பெ­ற­வி­ருக்­கிறது.

எண் 1 ஸ்ட்­ரெய்ட்ஸ் பொலிவார்ட் முக­வ­ரி­யில் உள்ள சிங்­கப்­பூர் சீன கலா­சார நிலை­யத்­தில் கலைப் படைப்பு கண்­காட்சி மார்ச் 31ஆம் தேதி வரை அன்­றா­டம் நடக்­கும்.

குறிப்­பிட்ட சனிக்­கி­ழ­மை­களில் லேசர் ஒளி, ஒலி நிகழ்ச்சி நடக்­கும். சிங்­கப்­பூர் சீன கலா­சார நிலை­யம் சீனப் புத்­தாண்டு இணைய வழிகாட்டி ஒன்றை https://festivefever.singaporeccc.org.sg/chinese-new-year/ முக­வ­ரி­யில் ஜன­வரி 4ஆம் தேதி தொடங்கும்.

கரை­யோரப் பூந்தோட்­டங்­களில் ஜன­வரி 20 முதல் 28 வரை ஆற்று ஹொங்­பாவ் கேளிக்கை நிகழ்ச்சி நடக்­கும். ஜன­வரி 13 முதல் 26 வரை ஃபிளவர் டூமில் மிதவை காட்சி நடக்­கும்.

சன் யாட் சென் நன்­யாங் நினைவு மண்­ட­பத்­தில் வாங் சிங் இள­வே­னிற் திரு­விழா தொடங்கும். இது டிசம்­பர் 29 முதல் பிப்­ர­வரி 19 வரை திறந்­தி­ருக்­கும்.

சிங்க நட­னம், இசைப் பயிலரங்கு­கள், சிறா­ருக்­கான கதை சொல்லும், கைவினை நிகழ்ச்­சி­களில் வரு­கை­யா­ளர்கள் பதிந்­து­கொள்­ள­லாம்.

இந்த நினைவு மண்­ட­பம் முதன் முறையாக சிறப்பு கோயில் சுற்­று­லாவை நடத்­தும். தேசிய மர­பு­டை­மைக் கழ­கம், சந்­திரப் புத்­தாண்டு அருங்­காட்­சி­யக வட்­ட­மேசை ஹொங்­பாவ் இயக்­கத்தை ஜன­வரி 6 முதல் பிப்­ர­வரி 3 வரை நடத்­தும்.

சீனப் புத்­தாண்­டை­யொட்டி சிங்­கப்­பூர் தேசிய அருங்­காட்­சி­ய­கத்­தின் நிரந்­தர கலைக் கூடங்­களுக்­கான நுழைவு பிப்­ர­வரி 4 ஆம் தேதியன்று இல­வ­ச­மாக இருக்­கும்.

கோயில் சுற்­றுலா போன்ற புத்­தாக்க அம்­சங்­கள், இதர கவர்ச்­சி­கள் கார­ண­மாக அருங்­காட்­சி­ய­கத்­திற்கு வரும் பார்­வை­யா­ளர்­களின் எண்­ணிக்கை அதி­க­மாக இருக்­கும் என்று எதிர்­பார்ப்­ப­தாக தேசிய மர­பு­டைமைக் கழ­கத்­தின் துணைத் தலைமை நிர்­வாகி ஆல்வின் டான் கூறி­னார்.