45வது வேலையிட மரணம்: 31 வயது சிங்கப்பூரர் மாண்டார்

45வது வேலையிட மரணம்: 31 வயது சிங்கப்பூரர் மாண்டார்

2 mins read
0c30c7cd-18e6-4886-b8b3-1f5355af7d64
-

இயந்­தி­ரம் தம்மை மோதிய பிறகு அது தம் மேல் விழுந்ததில 31 வயது சிங்­கப்­பூர் ஆட­வர் நேற்று காலை மாண்­டார். இந்த ஆண்டு இது­வரை வேலை­யி­டத்­தில் நிகழ்ந்த 45வது மர­ணம் இது­வா­கும். பாரந்­தூக்கி ஒன்று இயந்­தி­ரத்தை நகர்த்­திக் கொண்­டி­ருந்­தது. அப்­போது இயந்­தி­ரம் சரிந்து ஊழி­யர்­மீது விழுந்­தது.

அந்­ந­பர் ஆர்­சி­எம் ரிசோர்­சஸ் எனும் ஒட்­டு­மொத்த வணிக நிறு­வ­னத்­தின் ஊழி­யர் ஆவார். நினை­வி­ழந்த நிலை­யில் அவர், இங் டெங் ஃபோங் பொது மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­டார்.

அப்­பர் பியர்ஸ் நீர்த்­தேக்­கம் அருகே, 601 ரைஃபிள் ரேஞ்ச் ரோட்­டில் விபத்து நடந்­தது. 'எஸ்டி என்­ஜி­னி­ய­ரிங் அட்­வான்ஸ்ட் மெட்­டி­ரி­யல் என்­ஜி­னி­ய­ரிங்' நிறு­வ­னம் அந்த இடத்­தில் செயல்­ப­டு­கிறது.

ஊழி­யர் உயிர் இழந்­து­விட்­ட­தாக மருத்­து­வ­ம­னை­யில் அறி­விக்­கப்­பட்­ட­தாக மனி­த­வள அமைச்சு நேற்று தெரி­வித்­தது.

பாரந்­தூக்­கி­க­ளைப் பயன்­ப­டுத்­தும்­போது, தூக்­கும் பொரு­ளுக்­குக் கீழ் தட்­டைக்­கம்­பி­கள் செரு­கப்­பட்­டி­ருப்­ப­தும் வேறு இடத்­தில் வைப்­ ப­தற்­காக அவற்­றைத் தூக்­கும்­போது, பொருள் நிலை­யாக வைக்­கப்­பட்­டி­ருப்­ப­தும் முக்­கி­யம் என்­று அமைச்சு கூறி­யது.

"தூக்­கும் பார­மான பொருள், தற்­செ­ய­லாக விழு­வ­தைத் தடுக்க இவற்­றைச் செய்ய வேண்­டும்," என்று அமைச்சு விவரித்­தது.

சென்ற 2021ஆம் ஆண்டு மொத்­த­மும் 37 விபத்­து­கள் வேலை­யி­டங்­களில் நிகழ்ந்­தன. ஆனால் இவ்­வாண்டு இது­வரை ஏற்­பட்­டுள்ள 45 வேலை­யிட மர­ணங்­கள் அந்த எண்­ணிக்­கையை மிஞ்­சி­யுள்­ளன.

மேலும், 2016க்குப் பிறகு இவ்­வாண்டே வேலை­யிட மர­ணங்­கள் ஆக அதிக எண்­ணிக்­கை­யில் நிகழ்ந்துள்­ளன. 2016ல் 66 பேர் வேலை­யி­டங்­களில் உயிரிழந்­த­னர்.

இவ்­வாண்டு முற்­ப­கு­தி­யில் அதி­க­மான வேலை­யிட மர­ணங்­கள் நிகழ்ந்ததை அடுத்து, செப்­டம்­பர் 1ஆம் தேதி, ஆறு மாதத்­துக்கு உயர்­வி­ழிப்­பு­நிலை பாது­காப்பு கடைப்­பி­டிக்­கப்பட­ வேண்­டும் என்று உத்­த­ர­விடப்பட்­டது.

விபத்­துக்­குப் பிறகு கடு­மை­யான பாது­காப்பு குறை­பா­டு­கள் இருப்­பது தெரிய வந்­தால் நிறு­வ­னங்­கள் வெளி­நாட்டு ஊழி­யர்­களை வேலை­யில் அமர்த்த தடை விதிக்­கப்­ப­ட­லாம்.