மின்தூக்கிக்குள் தீப்பிடித்ததால் இறந்த 20 வயது இளையர்: மரண விசாரணை தொடங்கியது

மின்தூக்கிக்குள் தீப்பிடித்ததால் இறந்த 20 வயது இளையர்: மரண விசாரணை தொடங்கியது

2 mins read
5a02f8de-7f26-4ad6-a91d-d6a066a2d231
-

மின்­தூக்­கிக்­குள் இருந்­த­போது தமது மாற்­றி­ய­மைக்­கப்­பட்ட தனி­ந­பர் நட­மாட்­டச் சாத­னம் தீப்­பற்­றி­யதை அடுத்து, 20 வயது இளை­யர் ஒரு­வர் அதி­க­மான தீக்­கா­யங்­க­ளா­லும் புகையை உள்­ளி­ழுத்­த­தா­லும் இறந்­தார்.

முக­மது இர்­ஃபான் டேனிஷ் அஸா­ரின் மர­ணம் குறித்த விசா­ரணை நேற்று முதல் நாளாக நடை­பெற்­றது. அதில் சாட்­சி­யம் அளித்த காவல்­துறை அதி­காரி, அந்­தத் தனி­ந­பர் நட­மாட்­டச் சாத­னம் பாது­காப்­புத் தரங்­க­ளுக்கு ஏற்­ற­தாக இருக்­க­வில்லை என்று கூறி­னார்.

திரு இர்­ஃபான் 2020ஆம் ஆண்டு டிசம்­ப­ரில் அந்­தச் சாத­னத்தை கெரோ­செல் இணைய விற்­ப­னைத் தளத்­தி­லி­ருந்து வாங்­கி­னார். அவர் அதை வாங்­கி­ய­போதே சாத­னம் மாற்றி அமைக்­கப்­பட்­டி­ருந்­தது என்று உட்­லண்ட்ஸ் காவல்­து­றைப் பிரி­வின் ஆய்­வா­ளர் சோஃபியான் அஸாமி கூறினார். "சாத­னத்­தில் மின்­சா­ரத்தை ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய மின்­க­லத்­தைப் பொருத்தி, அவர் அதை மேலும் மாற்­றி­னார்," என்­றார் திரு சோஃபியான்.

மின்­சா­ரமே தீ மூண்­ட­தற்கு மூல கார­ணம் என்­றும் அது தனி­ந­பர் நட­மாட்­டச் சாத­னத்­தில் தொடங்­கி­யது என்­றும் சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை­யின் மூத்த தீச்­சம்­பவ விசா­ரணை அதி­காரி முக­மது ஃபைசல் மஸ்­லான் குறிப்­பிட்­டார். ஒரு மின்­க­லம் அள­வுக்கு அதி­க­மாக வெப்­பம் அடை­வ­தை­யும் மின்­னேற்­றம் நிகழ்­வ­தை­யும் தடுக்­கும் மின்­கல நிர்­வாக முறை அதில் இல்லை என்­றார் அவர்.

கடந்த 2021 ஜூன் 3ஆம் தேதி உட்­லண்ட்ஸ் டிரைவ் 16 புளோக் 537ல் இரவு 11.25 மணிக்கு மேல் சம்­ப­வம் நடந்­தது. திரு இர்­ஃபான் மின்­தூக்­கிக்­குள் தனி­யாக இருந்­த­போது தீ மூண்­டது. பலத்த காயங்­கள் ஏற்­பட்­டதை அடுத்து, அவர் மறு­நாள் கூ டெக் புவாட் மருத்­து­வ­ம­னை­யில் கால­மா­னார்.