சிங்கப்பூரின் முன்னணி கோல்ஃப் விளையாட்டு மன்றங்களில் உறுப்பினராகச் சேர்வதற்கான சந்தா கட்டணங்கள் உச்சத்தை அடைந்துள்ளன. வெளிநாட்டவர் அதிகக் கட்டணம் செலுத்தி உறுப்பினர்கள் ஆவதால் கட்டணங்கள் உயர்ந்து வருவதாக அத்துறை சார்ந்தவர்களும் உறுப்பியம் வாங்கித் தரும் தரகர்களும் கூறினர்.
செந்தோசா கோல்ஃப் மன்றத்தில் சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் சேர்வதற்கான கட்டணம் 500,000 வெள்ளிக்கு மேல் கூடியிருக்கிறது.
சிங்கப்பூர் ஐலண்ட் கன்ட்ரி கிளப்பில் சேர்வதற்கான கட்டணம் அண்மையில் 300,000 வெள்ளியைத் தொட்டது. இவை முன்னெப்போதும் இல்லாத அதிக விலையாகும்.
இதுபோன்ற கோல்ஃப் மன்றங்களில் வெளிநாட்டவர் அதிகம் சேர்ந்துவருவதால், வெளிநாட்டவர்களுக்கான கட்டணங்கள் கூடியுள்ளன. அதேபோல உள்நாட்டவர்க்கான பிரிவிலும் பெரும் அளவு கட்டணங்கள் உயர்ந்துள்ளன.
சிங்கப்பூருக்கு வந்த பல புதியவர்கள் நிரந்தரவாசம் பெற்று, உள்நாட்டவராக மன்றங்களில் சேர தகுதி பெறுகின்றனர் என்று உறுப்பியம் பெற்றுத் தரும் சிங்கோல்ஃப் தரகு நிறுவனத்தின் உரிமையாளர் லீ லீ லேங்டேல் கூறினார்.

