ஆயிரக்கணக்கானோர் திரள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது

ஆயிரக்கணக்கானோர் திரள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது

3 mins read
19b9363f-7c81-47de-a240-2020ce47e35e
-

புத்­தாண்டை வர­வேற்க வரும் சனிக்­கி­ழமை மாலை மரினா பேயில் ஆயி­ரக்­க­ணக்­கா­னோர் திரள்­வர் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. மாலை 6 மணி­யி­லி­ருந்து அவ்­வி­டத்­தில் மக்­கள் வெள்­ளம் அலை­மோ­தும் என்­ப­தால் அதற்­குத் தேவை­யான ஏற்­பா­டு­க­ளைக் காவல்­துறை செய்து வரு­கிறது.

பொது­மக்­க­ளின் பாது­காப்­புக்கு முக்­கி­யத்­து­வம் கொடுக்­கப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. மரினா பே வட்­டா­ரத்­தில் உள்ள பல்­வேறு இடங்­களில் 700க்கும் மேற்­பட்ட காவல்­துறை அதி­கா­ரி­கள் பாது­காப்­புப் பணி­யில் ஈடுபடுத்தப்படுவர் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சிறப்பு நட­வ­டிக்கை தள­பத்­தி­யம், பாது­காப்பு தள­பத்­தி­யம், பொதுப் போக்­கு­வ­ரத்து பாது­காப்பு தள­பத்­தி­யம், கட­லோ­ரக் காவல்­படை, போக்­கு­வ­ரத்து காவல்­துறை, அவ­ச­ர­கா­லச் சேவைப் பிரிவு, வான்­வழி நட­வ­டிக்­கைப் பிரிவு, காவல்துறை தரைப் பிரிவுகள் ஆகி­ய­வற்றை சேர்ந்த அதி­கா­ரி­கள் மரினா பே வட்­டா­ரத்­தில் நிறுத்­தப்­ப­டு­வர்.

கொவிட்-19 நெருக்­க­டி­நிலை கார­ண­மாக கடந்த இரண்டு ஆண்­டு­க­ளாக மரினா பே வட்­டா­ரத்­தில் புத்­தாண்டுக் கொண்­டாட்­டம் நடை­பெ­ற­வில்லை. புத்­தாண்டுக் கொண்­டாட்­டத்­தின்­போது வாண­வே­டிக்கை ரத்து செய்­யப்­பட்­டது. மக்­கள் அங்கு கூடா­மல் இருக்க அவ்­வாறு செய்­யப்­பட்­டது.

இதற்­கி­டையே, இவ்­வாண்டு மரினா பேயில் நடை­பெ­றும் புத்­தாண்டுக் கொண்­டாட்­டத்­தில் கலந்­து­கொள்­வோர் வாண­வே­டிக்­கை­யைக் கண்டு மகி­ழ­லாம். புத்­தாண்டை வர­வேற்­கும் வகை­யில் நள்­ளி­ர­வில் கிட்­டத்­தட்ட ஏழு நிமி­டங்­க­ளுக்கு வாண­வே­டிக்கை வானத்தை அலங்­க­ரிக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இத­னால் அப்­ப­கு­தி­யில் உள்ள பல உண­வ­கங்­களில் உண­வ­ருந்த பலர் முன்­ப­திவு செய்­து­விட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது. அங்கு உண­வ­ருந்­திக்­கொண்டே வாண­வே­டிக்­கை­யைப் பார்த்து ரசிக்­க­லாம்.

மரினா பே புத்­தாண்டுக் கொண்­டாட்­டத்தை நேரில் காண வரு­வோ­ரின் எண்­ணிக்­கை­யைப் பொறுத்­த­வரை, கொவிட்-19 நெருக்­க­டி­

நி­லைக்கு முன்பு இருந்த நிலை இம்­முறை எட்­டப்­படும் என்று அதி­கா­ரி­கள் எதிர்­பார்க்­கின்­ற­னர். கொவிட்-19 நெருக்­க­டி­நி­லைக்கு முன்பு அந்­தக் கொண்­டாட்­டத்­தில் ஏறத்­தாழ 300,000 பேர் கலந்­து­கொள்­வது வழக்­க­மாக இருந்­தது.

அதிக கூட்­டத்தை எதிர்­பார்ப்­ப­தால் மேம்­ப­டுத்­தப்­பட்ட சுற்­றுக்­

கா­வல் பணி­யில் அதி­கா­ரி­கள் ஈடு­

ப­டு­வர் என்று மத்­திய காவல்­துறை பிரி­வைச் சேர்ந்த காவல்­துறை கண்­கா­ணிப்­பா­ளர் ஹோ வீ ஃபாங் தெரி­வித்­தார்.

அள­வுக்கு அதி­க­மான கூட்ட நெரி­ச­லைத் தவிர்க்க மரினா பே வட்­டா­ரத்­துக்­குச் செல்­வோ­ரின் எண்­ணிக்­கையை காவல்­துறை கட்­டுப்­ப­டுத்­தும் என்று அவர் கூறி­னார். வழக்­க­மான பய­ணப் பாதை­கள் மாற்­றப்­படும் என்­றும் சில இடங்­களில் நெரி­சல் அதி­க­மாக இருக்­கும் என்­றும் அவர் தெரி­வித்­தார்.

மேம்­ப­டுத்­தப்­பட்ட பாது­காப்பு நட­வ­டிக்­கை­க­ளின் ஒரு பகு­தி­யாக ஆங்­காங்கே தடுப்­பு­கள் போடப்­படும் என்று அறி­யப்­ப­டு­கிறது.

அண்­மை­யில் தென்­கொ­ரி­யத் தலை­ந­கர் சோலில் நடை­பெற்ற ஹெலோ­வின் திரு­வி­ழா­வின்­போது கூட்ட நேரி­சல் கார­ண­மாக 150க்கும் மேற்­பட்­டோர் மாண்­ட­னர்.

அத்­த­கைய ஒரு சோக நிகழ்வு சிங்­கப்­பூ­ரில் நிக­ழக்­கூ­டாது என்­ப­தில் உள்­ளூர் அதி­கா­ரி­கள் உறு­தி­ யாக இருக்­கின்­ற­னர். பாது­காப்பு தொடர்­பாக மெத்­த­ன­மாக இருந்­து ­வி­டக்­கூ­டாது என்­பதை சோலில் நிகழ்ந்த துய­ரச் சம்­ப­வம் நினை­வூட்­டு­கிறது என்று சிங்­கப்­பூர் காவல்­துறை வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

இம்­முறை மெரினா பே புத்­தாண்டுக் கொண்­டாட்­டத்­துக்­கான பாது­காப்­புப் பணி­களில் தொழில்­நுட்­பம் பயன்­ப­டுத்­தப்­படும் என்று காவல்­துறை கூறி­யது.

தண்­ணீ­ரில் நனைந்­தா­லும் பழு­த­டை­யாத ஆளில்லா வானூர்திகள் பயன்­ப­டுத்­தப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

பயிற்சி பெற்ற அதி­கா­ரி­கள் அவற்றை இயக்­கு­வர் என்­றும் மழை பெய்­தா­லும் பாதிப்பு ஏதும் இருக்­காது என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

ஆள் நட­மாட்­டம் அதி­கம் உள்ள இடங்­க­ளி­லும் 'மோபி­கேம்' எனுப்­படும் சிறப்பு கேம­ராக்­கள் பொருத்­தப்­படும். அவற்­றின் மூலம் அறி­விப்பு, படங்­கள் மூலம் பொது­மக்­க­ளுக்கு அதி­கா­ரி­க­ளால் தக­வல் தெரி­விக்க முடி­யும்.