பாசிர் ரிஸ் கடற்கரையில் 'பிபிகியூ பிட் 21'க்கு அருகே உயிரற்ற சிசு கண்டெடுக்கப்பட்டதாக கிறிஸ்துமஸ் தினத்துக்கு முந்தைய நாளான சனிக்கிழமை இரவு 10.13 மணிக்கு தனக்கு தகவல் கிடைத்ததாக காவல்துறை நேற்று கூறியது.
கான்கிரீட் பாளத்துக்கு அடியில் உயிரற்ற சிசு இருந்ததை 10
வயது சிறுவன் கண்டதாக சீனமொழி நாளிதழான சாவ்பாவ் தெரிவித்தது.
தம்முடைய குடும்பத்தாருடன் பூங்காவில் முகாமிட்டிருந்த அச்சிறுவன், தமது தாயாரிடம் இதுகுறித்து தெரியப்படுத்தியதும் காவல்துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டது.
உயிரற்ற சிசு கண்டெடுக்கப்பட்ட இடத்துக்கு ஏழெட்டு காவல்துறை கார்களில் வந்த கிட்டத்தட்ட 20 காவல்துறை அதிகாரிகள், அந்த இடத்தைச் சுற்றி தடுப்புவேலிகளை அமைத்ததாக நேரில் கண்டோர் சாவ்பாவ் நாளிதழிடம் கூறினார்.
அங்கிருந்தவர்களிடம் பேசிய அதிகாரிகள், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணி வரை கடற்
கரையில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
குழந்தை பிறப்பை வேண்டுமென்றே மறைப்பதற்காக, இறந்த குழந்தையின் உடலை ரகசியமாக அடக்கம் செய்வதோ அப்புறப்
படுத்துவதோ குற்றமாகும்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதில் சம்பந்தப்பட்டவருக்கு ஈராண்டு வரை சிறைத் தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

