புத்தாண்டுக் கொண்டாட்டத்தை முன்னிட்டு மரினா பே வட்டாரம் அருகே சில சாலைகள் மூடப்படுவதால் வரும் சனிக்கிழமை மாலை 6 மணியிலிருந்து பல்வேறு பேருந்துச் சேவைகளின் பயணப் பாதை மாற்றி அமைக்கப்படும் என்று எஸ்பிஎஸ் டிரான்சிட், டவர் டிரான்சிட், கோ அஹெட் ஆகிய நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
மரினா பேயில் நடைபெறும் புத்தாண்டு கொண்டாட்டம் காரணமாக பேஃபிரண்ட் அவென்யூ, பீச் ரோடு, குடிமை வட்டாரம் ஆகிய இடங்களில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் டிரான்சிட் நிறுவனத்துக்குச் சொந்தமான 16 பேருந்துச் சேவைகள் சேவை வழங்காது.
பேருந்து எண் 10, 14, 56, 57, 70/70M, 100, 111, 130, 131, 162M, 195, 196, 400, 502 பேருந்துகள் மேல் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் கொண்டாட்ட நேரத்தின்போது சேவை வழங்காது.
வரும் சனிக்கிழமை மாலை 6 மணியிலிருந்து கடைசி பேருந்துச் சேவை வரை பேஃபிரண்ட் அவென்யூ, பிராஸ் பசார் சாலை, ராஃபிள்ஸ் அவென்யூ, தெமாசெக் அவென்யூ, தெமாசெக் பொலிவார்ட் ஆகிய இடங்களில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் தனது பேருந்துகள் சேவை வழங்காது என்று டவர் டிரான்சிட் கூறியது.
பாதிக்கப்பட்ட பேருந்துச் சேவைகள் 77, 97, 106, 167, 857.
அதே நாள், நேரம், இடத்தில் கோ அஹெட்டின் பேருந்து எண் 36, 518 ஆகியவை சேவை வழங்காது என்று தெரிவிக்கப்பட்டது.
புத்தாண்டுக் கொண்டாட்டம் முடிந்து பயணிகள் வீடு திரும்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பயணிகளுக்கு வசதியாக குறிப்பிட்ட சில பேருந்து, ரயில் சேவை
களின் சேவை நேரம் வரும் சனிக்கிழமையன்று நீட்டிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

