முனைவர் செல்லக்கிருஷ்ணனுக்கு பாரதியார் விருது

முனைவர் செல்லக்கிருஷ்ணனுக்கு பாரதியார் விருது

2 mins read
f4714294-6478-42bd-8675-3d2871d6f008
-

ரச்­சனா வேலா­யு­தம்

கிட்­டத்­தட்ட முப்­பது ஆண்­டு­க­ளுக்­கும் மேலாக சிங்­கப்­பூ­ரின் கல்­வித் துறை­யில் பணி­யாற்­றி­வ­ரும் முனை­வர் ந. செல்­லக்­கி­ருஷ்­ண­னுக்கு இம்­மா­தம் 26ஆம் தேதி நடந்த பார­தி­யார் விழா­வில் 'பார­தி­யார் விருது' வழங்­கப்­பட்­டது.

தமிழ் மொழிக்­கா­க­வும் தமிழ் மக்­க­ளின் மேம்பாட்டுக்காகவும் சேவை ஆற்­றி­ய­வ­ருக்கு ஆண்­டு­தோ­றும் வழங்­கப்­படும் இவ்­வி­ருதை இலக்­கி­யம் மீது அதிக நாட்­டம் உள்ள இவர் பெற்­றுக்­கொண்­டார்.

கடந்த ஐந்து ஆண்­டு­க­ளாக சிங்­கப்­பூர் சமூக அறி­வி­யல் பல்­

க­லைக்­க­ழ­கத்­தில் விரி­வு­ரை­யா­ள­ரா­கப் பணி­யாற்­றி­வ­ரும் முனை­வர் செல்­லக்­கி­ருஷ்­ணன், தமிழ் முரசு, தமிழ்மொழிக் கற்­றல் வளர்ச்­சிக் குழு, சிங்­கப்­பூர் தமி­ழா­சி­ரி­யர் சங்­கம் ஆகி­யவை இணைந்து வழங்­கும் 'நல்­லா­சி­ரி­யர் விருது' உட்­பட பல விரு­து­க­ளைப் பெற்­றுள்­ளார்.

புதிய பாணி­யில், காலத்­திற்கு ஏற்ப தமிழ் இலக்­கி­யத்தை மாண­வர்­க­ளுக்குக் கற்­பிப்­ப­தில் மும்­மு­ர­மாகச் செயல்­படும் இவர் இந்த விருதைப் பெறு­வ­தில் பெருமை கொள்­கி­றார்.

தமிழ்­மொழி பண்­பாட்­டுக் கழ­கத்­தின் ஏற்­பாட்­டில் நடந்த இவ்­விழா, இந்த ஆண்டு ஸூம் மெய்­நி­கர் தளம் வழி நடை­பெற்­றது. 'பார­தி­யாரை மக்­கள் முழு­மை­யாக புரிந்­தி­ருக்­கி­றார்­களா?' என்ற தலைப்­பில் பட்­டி­மன்­ற­மும் நடந்­தது.

ஏறத்­தாழ 70 பேர் கலந்­து­கொண்ட இந்த நிகழ்ச்­சி­யின் நேரலை யூடி­யூப் வாயி­லாக ஒளி­

ப­ரப்­பப்­பட்­டது.

சிங்­கப்­பூ­ரில் உள்ள பல தமிழ் பேச்­சா­ளர் மன்­றங்­க­ளி­லி­ருந்து பேச்­சா­ளர்­கள் இந்­நி­கழ்ச்­சி­யில் பங்­கேற்­ற­னர். தமிழகத்தின் பிர­பல பட்­டி­மன்ற பேச்­சா­ளர் திரு சுகி­

சி­வம் தலை­மை­யில் இந்­தப் பட்­டி­மன்­றம் நடந்­தது.

"பார­தி­யா­ரின் சிறப்­பு­க­ளை­யும் தாக்­கத்­தை­யும் இந்­தப் பட்­டி­மன்­றம் சிறப்­பாக வெளிப்­படுத்தியது.

பேச்­சா­ளர்­க­ளுக்கு இந்­தப் போட்டி ஒரு நல்ல தள­மாக அமைந்­தி­ருக்­கும் என்று நம்­பு­கி­றேன்," என்று கழ­கத்­தின் தலை­வர் மு. ஹரி­

கி­ருஷ்­ணன் கூறி­னார்.

'நாம் பார­தி­யாரைப் புரிந்து வைத்­துள்­ளோம்' என்று ஹேமா சுவா­மி­நா­தன், கேத்­தி­ர­பா­லன் மூக்­காண்டி, சிலம்­ப­ர­சன் பரு­சப்­புலி ஆகி­யோர் ஒட்டிப் பேசி­னர்.

சிறு குழந்­தைக்­குப் புரி­யும் வகை­யில், சொல்­ல­ வ­ரு­வதை எளி­தான தமி­ழில் பாரதி கூறி­யுள்­ளார். மறைந்து நூறு ஆண்­டு­க­ளா­கி­யும் பார­தி­யாரை இந்த உல­கம் கொண்­டா­டு­கிறது என்­ப­தில் தமி­ழர்­

க­ளுக்குப் பெருமை என்று மூவர் வா­திட்டனர்.

'பார­தி­யாரை நாம் இன்­னும் புரிந்து­கொள்­ள­வில்லை' என்று எதிர்த்த­ரப்­பைச் சேர்ந்த பார­தி­

செல்­வன், உமா சங்­கர், அனு­ராதா வெங்­க­டேஸ்­வ­ரன் ஆகி­யோர் ஆதங்­கத்­து­டன் கூறி­னர்.

உயி­ரோடு இருக்­கும்­போது

பார­தி­யைப் போற்­றாத நிலை­யில் அவரை ஒதுக்கி வைத்­தது சமு­தா­யம். இறந்­த பிறகு, போற்­று­வ­தில் என்ன பயன் என்று வின­வி­னர்.

இப்­போது திரைப்­பட நடி­கர்­

க­ளைப் போற்­றும் விதத்­தில் அப்­போது பார­தி­யாரைப் போற்­றி­யி­ருந்­தால் அவ­ரின் சொல் உல­க­ள­வில் முன்­கூட்­டியே பர­வி­யி­ருக்­கும் என்­றும் குறிப்­பிட்­ட­னர்.

யார் சொல்­லுக்­கும் அடி­ப­ணி­யாத பார­தி­யாரை எக்­கா­லத்­தி­லும் புரிந்­து­கொள்ள முடி­யாது என்ற தீர்ப்பை பட்­டி­மன்ற நடு­வர் திரு சுகி­சி­வம் வழங்­கி­னார்.

எனி­னும், நாம் பார­தி­யாரைப் புரிந்­துக்­கொண்­டோம் என்ற அணி பேச்­ச­ள­வில் வெற்றி பெற்­றது என்றும் அறி­வித்­தார்.