சமுராய் வாள் தாக்குதல்: ஆடவருக்குச் சிறை, பிரம்படி

2 mins read
88d7324e-8c98-420e-beec-49a4b553a076
-

சமு­ராய் வாளைப் பயன்­ப­டுத்தி புவாங்­கோக் ஸ்கு­வேர் கடைத்­தொ­கு­திக்கு அரு­கில் பாத­சாரி ஒரு­வ­ரைக் காயப்­ப­டுத்தி, அவ்­வ­ழி­

யா­கச் சென்ற கார்­க­ளை­யும் வாளால் அடித்­துச் சேதப்­ப­டுத்­திய ஆட­வ­ருக்கு 18 மாதச் சிறைத் தண்­ட­னை­யும் ஆறு பிரம்­ப­டி­களும் விதிக்­கப்­பட்­டன.

கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதி பிற்­

ப­கல் 2 மணி அள­வில் திரு குமா­ர­பேலி அரச்­சிகே அமிலா சிந்­த­னாவை 38 வயது ஃபாதில் யூசோஃப் வாளால் தாக்கி காயப்­

ப­டுத்­தி­னார்.

பாதிக்­கப்­பட்ட ஆட­வ­ரின் இடது கரத்­தி­லும் தோள்­பட்­டை­யி­லும் வெட்­டுக் காயங்­கள் ஏற்­பட்­டன.

பிறர் உயி­ருக்கு ஆபத்து விளை­வித்­தல், படு­கா­யம் விளை­விக்­கக்­கூ­டிய ஆயு­தத்தை வைத்­தி­ருத்­தல், ஆயு­தம் பயன்­ப­டுத்தி வேண்டுமென்றே பிற­ருக்­குக் காயம் விளை­வித்­தல் ஆகிய குற்­றச்­சாட்­டு­களை ஃபாதில் ஒப்­புக்­கொண்­டார்.

தீர்ப்பு அளிக்­கப்­பட்­ட­போது மேலும் இரு குற்­றச்­சாட்­டு­கள் கருத்­தில் கொள்­ளப்

­பட்­டன.

அந்த 63 சென்­டி­மீட்­டர் வாளு­டன் வீட்­டை­விட்டு வெளி­யேறும் முன்னர் ஃபாதில் சில மாத்­தி­ரை­களை உட்­கொண்­ட­தாக காவல்­துறை தெரி­வித்­தி­ருந்­தது. ஆனால் அவை என்ன மாத்­திரை என்று அது குறிப்­பி­ட­வில்லை.

ஃபாதிலின் செய­லால் சேத­ம­டைந்த கார்­களைப் பழு­து­பார்க்க $2,400க்கும் மேல் செல­வா­னது.

திரு சிந்­த­னாவை ஃபாதில் தாக்­கி­ய­போது வழிப்­போக்­கர்­கள் சிலர் அவரை மடக்­கிப் பிடித்து காவல்­து­றை­யி­னர் வரும்­வரை காத்­தி­ருந்­த­னர்.

ஃபாதிலைக் கைது செய்த காவல்துறையினர் அவரது வீட்டில் சோதனை நடத்தி மஞ்சள் மாத்திரைகளைக் கொண்ட இரு பைகளைப் பறிமுதல் செய்தனர். திரு சிந்தனாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மூன்று நாள்கள் மருத்துவ விடுப்பு வழங்கப்பட்டது. மருத்துவக் கட்டணத்துக்காக திரு சிந்தனா $110 செலவழித்தார்.