'கவிதைத் துளிகள்': உள்ளூர்க் கவிதைகளை ஆராய்வதற்கு அரிய வாய்ப்பு வழங்கும் போட்டி

'கவிதைத் துளிகள்': உள்ளூர்க் கவிதைகளை ஆராய்வதற்கு அரிய வாய்ப்பு வழங்கும் போட்டி

2 mins read
ad33c4fe-7297-4a22-8cb8-bf0a766d8b5e
-

மாதங்கி இளங்­கோ­வன்

உள்ளூர்க் கவிதைகளை ஆரா­ய வாய்ப்பளிக்கும் 'கவி­தைத் துளி­கள்' எனும் போட்டிக்கு தமிழ்­மொழி கற்றல் வளர்ச்­சிக் குழு ஏற்பாடு செய்துள்ளது.

இப்­போட்­டி­யின் வாயி­லாக கவி­தை­க­ளைப் பற்றி மக்­கள் தங்­கள் சிந்­த­னை­களை விளக்­கு­வ­தற்கு எட்டு உள்­ளூர் எழுத்­தா­ளர்­க­ளின் படைப்­பு­கள் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டு உள்­ளன.

ந.பழ­நி­வேலு, மா.இளங்­கண்­ணன், சிங்கை முகி­லன், பாத்­தூறல் முத்­து­மா­ணிக்­கம், க.து.மு.இக்­பால், மு.தங்­க­ராசன், ஜே.எம்.சாலி, பி.கிருஷ்­ணன் ஆகி­யோர் அந்த எட்டு உள்­ளூர் எழுத்­தா­ளர்­க­ளா­வர்.

போட்­டி­யில் கலந்­து­கொள்ள விரும்­புவோர், அந்த எட்டுப் பேரின் படைப்­பு­க­ளி­ல் இ­ருந்து தங்­க­ளுக்குப் பிடித்தமான கவி­தை­ ஒன்றைத் தேர்ந்­தெ­டுத்து, அது அவர்­க­ளது உள்­ளங்­களை ஏன் கவர்ந்­துள்­ளது என்­ப­தற்­கான கார­ணங்­களை விவ­ரிக்க வேண்­டும்.

அத்துடன், தாங்கள் தேர்ந்­தெடுத்த கவிதை தங்­க­ளது வாழ்க்­கைக்கு எவ்­வி­தத்­தில் பொருந்து கின்றது என்­ப­தை­யும் அவர்கள் விளக்­கிக் கூறவேண்­டும்.

போட்­டி­யா­ளர்­கள் தங்­க­ளு­டைய கருத்­துகளை கோவை­யாகக் கூறி, அதனை ஓர் ஒளிக்­காட்சி வடி­வில் தயார்செய்ய வேண்­டி­ய­து­தான் போட்­டி­யின் ஆக சுவா­ர­சி­ய­மான அங்­க­மாக விளங்­கு­கின்­றது.

அந்த ஒளிக்­காட்சி இரண்டு நிமி­டங்­க­ளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

மேலும், ஒளிக்­காட்சி படைப்பு போட்­டி­யா­ளர்­க­ளின் சுய­ப­டைப்­பாக அமைய வேண்­டும். போட்­டி­யா­ளர்­களின் படைப்பு பாணி தெளி­வா­க­வும் உணர்ச்­சி­களை வெளிப்­ப­டுத்­தும் வித­மா­க­வும் இருக்க வேண்­டும் என்று போட்டி ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.

போட்­டி­யா­ளர்­க­ள் அனுப்பும் ஒளிக்­காட்சி­கள் புத்­தாக்­கச் சிந்­த­னையை பிர­தி­பலிக்­கும் என்ற எதிர்­பார்ப்­பு­டன் போட்­டி­ ஏற்­பாட்­டுக் குழுவினர் காத்­தி­ருக்­கி­றார்­கள்.

இப்­போட்­டி­யில் பங்­கெ­டுக்க விரும்­பு­வோர் 18 வய­துக்­கு மேற்­பட்­ட­வர்­க­ளாக இருக்க வேண்­டும். ஒளிக்­காட்­சி­களை https://go.gov.sg/tllpcpoem23 என்­னும் இணை­யப்­பக்­கத்­தில் போட்­டி­யா­ளர்­கள் பதி­வேற்­றம் செய்­ய­லாம்.

இம்மாதம் 31ஆம் தேதி சனிக்கிழமைக்குள் போட்டியாளர்கள் தங்களது ஒளிக்காட்சிகளைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேல் விவ­ரங்­க­ளுக்கு @tllpc எனும் இன்ஸ்­ட­கி­ராம் பக்­கத்தை நாட­லாம்.

போட்­டி­யில் சிறந்த பத்து ஒளிக்­காட்­சிப் படைப்­பு­கள் தேர்­வு­செய்­யப்­பட்டு, வெற்­றி­யா­ளர்­க­ளுக்கு $30 மதிப்­பி­லான என்­டி­யுசி பற்­றுச்­சீட்டு­கள் பரி­சாக வழங்­கப்­படும்.