2,500 பெட்டிகள் கள்ள சிகரெட் பறிமுதல், இருவர் கைது

2,500 பெட்டிகள் கள்ள சிகரெட் பறிமுதல், இருவர் கைது

1 mins read
41e270df-9cdd-4a81-a50e-8628ad4a97d6
-

சுங்­கத் துறை­யி­னர் இம்­மா­தம் 22ஆம் தேதி 'கல் சர்க்­கிள்' வட்­டா­ரத்­தில் மேற்­கொண்ட சோதனை நட­வ­டிக்­கை­யில் 2,500 பெட்­டி­களில் வைக்கப்பட்டு இருந்த கள்­ள சிக­ரெட்­டு­களும் உபரியாக இருந்த 19 கள்ள சிகரெட்டுகளும் பிடி­பட்­டன.

இதன் தொடர்­பில் பங்­ளா­தேஷைச் சேர்ந்த ஆட­வர் இரு­வர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர். அவர்­களின் வயது முறையே 23, 28.

காலி­யாக இருந்த தொழிற்­துறைக் கட்­ட­டத்­தின் இரும்புக் கதவின்மேல் ஏறி குதித்து நுழைய முயன்ற ஆட­வர்­கள் இருவரும் அமலாக்க அதி­கா­ரி­க­ளைப் பார்த்­த­வு­டன் தப்­பி­யோட முயன்­ற­னர்.

பிடி­பட்ட அவர்­கள் மூலம், அந்­தக் கட்­ட­டத்­தில் வெவ்­வேறு இடங்­களில் வைக்­கப்­பட்­டி­ருந்த கள்­ள சிக­ரெட்­டு­கள் கைப்­பற்­றப்­பட்­டன.

இவற்­றின் மூலம் மொத்­தம் $213,500 வரி ஏய்க்­கப்­ப­ட­வி­ருந்­த­தா­க­வும் பொருள், சேவை வரி தொடர்­பில் $16,990 ஏய்க்க முயன்­ற­தா­க­வும் அதி­கா­ரி­கள் கூறி­னர்.

வரி ஏய்ப்பு நிரூ­பிக்­கப்­பட்­டால் வரித்­தொ­கை­யைப்­போல 40 மடங்கு வரை­யி­லான அப­ரா­தமோ ஆறாண்­டு­கள் வரை­யி­லான சிறைத்­தண்­ட­னையோ இரண்­டுமோ விதிக்­கப்­ப­ட­லாம்.

இதுகுறித்த விசா­ரணை தொடர்­கிறது.