ஸ்கூட் விமான ஊழியர்களுக்குக் கிடைத்தது வீரப் பதக்கம்

ஸ்கூட் விமான ஊழியர்களுக்குக் கிடைத்தது வீரப் பதக்கம்

1 mins read
6c174b79-f746-412f-af8f-0da0e5d137c8
-

சீனா­வின் வூஹான் நக­ரில் கொவிட்-19 கிருமி தலை­தூக்­கி­ய­போது 170க்கும் அதி­க­மான சிங்­கப்­பூ­ரர்­களும் அவர்­க­ளின் குடும்­பத்­தா­ரும் அந்­ந­க­ரில் சிக்­கிக்­கொண்­ட­னர். அவர்­களை மீட்க உத­விய ஸ்கூட் விமான ஊழி­யர்­களுக்­கும் மருத்­து­வப் பணி­யா­ளர்­களுக்­கும் கொவிட்-19 தொடர்­பில் 'மெடல் ஆஃப் வேலர்' எனும் வீரப் பதக்­கம் வழங்­கப்­படுகிறது.

முத­லில் 2020ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 30ஆம் தேதி­யன்று வூஹா­னில் சிக்­கி­யி­ருந்த சிங்­கப்­பூ­ரர்­களில் 92 பேர் ஸ்கூட் விமா­னத்­தில் இங்கு கொண்டு வரப்­பட்­ட­னர். அதற்­குப் பிறகு பிப்­ர­வரி மாதம் ஒன்­ப­தாம் தேதி­யன்று மேலும் பல சிங்­கப்­பூ­ரர்­கள் ஸ்கூட் விமா­னத்­தில் வூஹா­னி­லி­ருந்து மீட்­கப்­பட்­ட­னர்.

விமான ஊழி­யர் ஜிமி பங் உட்­பட அந்த இரு நட­வ­டிக்­கை­க­ளிலும் ஈடு­பட்ட சுமார் 30 ஸ்கூட் ஊழி­யர்­கள் வீரப் பதக்­கத்­தைப் பெறு­கின்­ற­னர்.

கொவிட்-19க்கு எதி­ரான சிங்கப்பூரின் போராட்­டத்­தில் பெரும்­பங்­காற்­றிய சுமார் 9,500 பேருக்கு விருது வழங்கி கௌர­விக்­கப்­ப­ட­வுள்­ளது.

அவர்­களில் சம்­பந்­தப்­பட்ட ஸ்கூட் ஊழி­யர்­களும் அடங்­கு­வர்.

விருதுகள் அடுத்த ஆண்டு வழங்கப்படும்.