டிபிஎஸ் வங்கியில் தலைமைத்துவ மாற்றங்கள் அறிவிப்பு

டிபிஎஸ் வங்கியில் தலைமைத்துவ மாற்றங்கள் அறிவிப்பு

1 mins read
8a565173-c772-48ff-90a7-e5e57aa1da5a
-

சிங்­கப்­பூ­ரின் ஆகப் பெரிய வங்­கி­யான டிபி­எஸ் அடுத்த ஆண்டு அதன் தலை­மைத்­து­வத்­தில் சில முக்­கிய மாற்­றங்­களை செய்­ய­வுள்­ளது. வங்­கி­யின் 'இன்ஸ்­டி­டி­யூ­ஷ­னல் பேங்­கிங் ஃபிரேஞ்­சைஸ்' எனப்­படும் பெரிய அமைப்­பு­க­ளுக்கு சேவை­கள் வழங்­கும் பிரிவை மேம்­ப­டுத்­து­வது மாற்­றங்­கள் செய்­யப்படுவதற்கான கார­ணம்.

டிபி­எஸ்-இல் சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­க­ளுக்­கான சேவை­கள் பிரி­வின் தலை­வ­ராக இருக்­கும் திரு­வாட்டி ஜாய்ஸ் டீ, நாளை மறு­நாள் முதல் சீனா­வுக்­கான டிபி­எஸ் கிளை­யின் பெரிய அமைப்­பு­க­ளுக்­கான சேவை­கள் பிரி­வின் தலை­வ­ரா­கப் பொறுப்பு வகிப்­பார்.

தற்­போது சிறிய, நடுத்­தர நிறு­வனங்­க­ளுக்­கான சேவை­கள் பிரி­வின் நடு­நிலை நிறு­வ­னங்­களுக்­கான குழுவின் தலை­வ­ராக இருக்­கும் திரு கோ கார் சியோங், திரு­வாட்டி டீயின் பொறுப்பை ஏற்றுக்­கொள்­வார். இந்த வட்­டா­ரத்­தின் சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­க­ளுக்­கான வங்­கிச் சேவை­க­ளை அவர் கவ­னிப்­பார்.