'எஸ்பிஎச் ரீட்'டின் புதிய பெயர் 'பேரகன் ரீட்'

'எஸ்பிஎச் ரீட்'டின் புதிய பெயர் 'பேரகன் ரீட்'

1 mins read
d4219a23-97df-4e6a-bf2f-f443e3fbecca
-

அடுத்த மாதம் மூன்­றாம் தேதி முதல் 'எஸ்­பி­எச் ரீட்' அமைப்­பின் பெயர் 'பேர­கன் ரீட்' என்று மாற்­றம் காணும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. அமைப்­பின் எண்­ணங்­க­ளை­யும் ஆசிய பசி­பிக் வட்­டா­ரத்­தில் இருக்­கக்­கூ­டிய மாறு­பட்ட வாய்ப்­பு­க­ளைப் பயன்­ப­டுத்­திக்­கொள்­ளும் இலக்­கை­யும் நன்கு வெளிப்­ப­டுத்த பெயர் மாற்­றப்­ப­டு­வ­தாக அதன் நிர்­வாகி ஒரு­வர் நேற்று தெரி­வித்­தார்.

'எஸ்­பி­எச் ரீட்'டுக்கு நிதி ஆத­ரவு வழங்­கி­வ­ரும் நிறு­வ­னம் கஸ்­கே­டன் பீக் இன்­வெஸ்­ட்­மென்ட்ஸ். முன்­ன­தாக எஸ்­பி­எச் ஹோல்­டிங்ஸ் என்று அழைக்­கப்­பட்ட அது, கஸ்­கே­டன் பீக் நிறு­வனத்­துக்­குச் சொந்­த­மா­னது.

சிங்­கப்­பூர் செல்­வந்­தர் ஓங் பெங் செங்­கின் ஹோட்­டல் சொத்­து­கள், தெமா­செக் நிறு­வனத்­து­டன் தொடர்­பு­டைய 'சிஎல்ஏ ரியல் எஸ்­டேட் ஹோல்­டிங்ஸ்', மேப்­பல்ட்ரீ ஆகிய நிறு­வனங்­களை உள்­ள­டக்­கி­யது கஸ்­கே­டன் பீக்.

சிங்­கப்­பூர் பங்­குச் சந்­தை­யில் 'எஸ்­பி­எச் ரீட்'டின் குறிப்பு எண் SK6U. பெயர் மாற்­றத்­திற்­குப் பிற­கும் அந்த எண் மாறாது என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

'எஸ்­பி­எச் ரீட்'டின் தற்­போ­தைய நிர்­வா­கக் குழுவே அதைத் தொடர்ந்து நடத்­தும்.

'தி கிள­மென்டி மால்', 'தி ரெய்ல் மால்', ஆர்ச்­சர்ட் சாலை­யில் உள்ள பேர­கன் ஆகிய கடைத்­தொ­கு­தி­கள் 'எஸ்­பி­எச் ரீட்'டின்­கீழ் உள்­ளன. இவற்­றோடு ஆஸ்­தி­ரே­லி­யா­வில் உள்ள இரண்டு கடைத்­தொ­கு­தி­களை­யும் அது நடத்தி வரு­கிறது.