அதிபர் ஹலிமா: ஆற்றல், திறமைக்கு சிங்கப்பூர் வெகுமதி அளிக்க வேண்டும்

அதிபர் ஹலிமா: ஆற்றல், திறமைக்கு சிங்கப்பூர் வெகுமதி அளிக்க வேண்டும்

3 mins read
f9923f73-20d8-4619-8038-4831bdc78fe2
-

ஏட்­டுக்­கல்வித் தகு­தியை மட்­டும் பாரா­மல் ஆற்­ற­லை­யும் தகு­தி­யை­யும் அங்­கீ­க­ரித்து அவற்­றுக்கு வெகு­மதி அளிக்க சிங்­கப்­பூர் உறுதி­பூண்­டி­ருக்க வேண்­டும் என்று அதி­பர் ஹலிமா யாக்­கோப் தெரி­வித்து இருக்­கி­றார்.

திரு­வாட்டி ஹலிமா ஃபேஸ்புக்­கில் தமது ஆண்­டி­றுதிச் செய்­தியை வெளி­யிட்­டார்.

"பொரு­ளி­ய­லுக்கு முக்­கி­ய­மாக இருக்­கக்­கூ­டிய அதிக தேர்ச்­சி­யுள்ள வேலை­க­ளுக்கு இன்­ன­மும் உரிய மதிப்பை நாம் அளிக்­க­வில்லை. அத்­த­கைய வேலை­களுக்குப் பட்­டப் படிப்பு தேவை என்ற அவ­சி­ய­மும் இல்லை. இந்த மனப்­போக்கு மாற வேண்­டும்," என்று அவர் தெரி­வித்துள்ளார்.

"ஊழி­யர்­க­ளைச் சேர்க்­கும் தங்­களு­டைய நடை­முறை­களை மாற்ற மேலும் முத­லா­ளி­கள் பல­வற்­றை­யும் செய்ய முடி­யும்.

"பட்­டப்படிப்பு இல்­லாத ஊழி­யர்­க­ளுக்கு இன்­னும் சிறந்த பயிற்சியை அளித்து வாழ்க்­கைத்­தொ­ழில் முன்­னேற்ற வழி­களை அமைத்துத் தர முடி­யும்," என்று அவர் தெரி­வித்­தார்.

"உல­கின் பல பகு­தி­க­ளி­லும் சமூ­கங்­கள் பிள­வு­பட்டு உள்­ளன. சில­வற்­றில் வன்­செ­யல்­கள்­கூட அங்­கே­று­கின்­றன.

"இருந்­தா­லும் சிங்­கப்­பூ­ரர்­கள் தொடர்ந்து புத்­தாண்­டி­லும் ஐக்­கி­ய­மாக இருந்து வரு­வார்­கள்," என்று அவர் பெரி­தும் நம்­பிக்கை தெரி­வித்­தார்.

"நம்­மு­டைய பன்­ம­யத்­தைக் காக்க நாம் அரும்­பா­டு­பட்டு இருக்­கி­றோம். ஒரு­வர் மற்­றொ­ரு­வரை புரிந்­து­கொண்டு மரி­யாதை அளித்து அதன்­மூ­லம் பிணைப்­பு­மிக்க சமூ­க­மாக நாம் திகழ்ந்து வரு­கி­றோம்.

"நம்மை பிள­வு­ப­டுத்­தக்­கூ­டிய அம்­சங்­களில் கவ­னம் செலுத்­தா­மல் நம்மை ஐக்­கி­யப்­ப­டுத்­தக்­கூ­டிய அம்­சங்­களில் ஒரு­மித்த கவ­னத்­தைச் செலுத்­து­வோம்," என்று அதி­பர் குறிப்­பிட்­டார்.

மன­ந­லப் பிரச்­சி­னை­களை எதிர்­நோக்­கு­வோர், உடற்­கு­றை­யா­ளர்­கள் ஆகி­யோ­ருக்கு தொடர்ந்து ஆத­ரவு அளிக்­கும்­படி சிங்­கப்­பூ­ரர்­களை அதி­பர் வலி­யு­றுத்­திக் கேட்­டுக்­கொண்­டார்.

பெரும் பொறுப்பை மவு­ன­மாக நிறை­வேற்­றக்­கூ­டிய பரா­ம­ரிப்­புத் துறை ஊழி­யர்­க­ளுக்கு மேலும் பல­வற்றை நாம் செய்ய வேண்­டும் என்­றும் அவர் கூறி­னார்.

இந்த ஆண்டை நினை­வு­கூர்ந்த அதி­பர், அதி­க­ரிக்­கும் பண­வீக்­கம், உக்­ரேன் மீது ரஷ்யா படை­யெ­டுப்பு, கொவிட்-19 தொற்­றின் நடப்பு நிலை ஆகி­ய­வற்­றைப் பற்றி குறிப்­பிட்­டார்.

"சிங்­கப்­பூர் வெற்­றி­க­ர­மான முறை­யில் தடுப்­பூசித் திட்­டத்தை நிறை­வேற்­றி­ய­தால் அது தன்­ எல்லை­க­ளைத் திறக்க முடிந்­தது. கட்­டுப்­பா­டு­களை அகற்ற முடிந்­தது.

"இத­னால் பொரு­ளி­ய­லுக்கு ஊக்­கம் கிடைத்­தது. நம் பொருளியல் இந்த ஆண்டில் 3.5% வளர்ச்சி காணும். இதற்கு அதுவே கார­ணம்," என்றார் அவர்.

இருந்­தா­லும் இதே வளர்ச்சி அடுத்த ஆண்­டி­லும் தொட­ரும் என்று எதிர்­பார்க்க இய­லாது என்று கூறிய அதி­பர், சிங்­கப்­பூர் பொரு­ளி­யல் 2023ல் 2.5% வரை வளர்ச்சி காணும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­வதா­கக் கூறி­னார்.

ஊழி­யர் சந்தை வலு­வாக இருக்­கிறது என்­றா­லும்­கூட பண­வீக்­கமும் நிச்­ச­ய­மில்­லாத உலக நில­வ­ர­மும் சிங்­கப்­பூ­ரர்­க­ளி­டையே கொஞ்­சம் கவ­லையை ஏற்­ப­டுத்தி இருக்­கின்­றன என்று திரு­வாட்டி ஹலிமா தெரி­வித்தார்.

குறைந்த வரு­மான குடும்­பங்­களுக்கு உத­வு­வ­தற்­காக சென்ற ஜூனில் அர­சாங்­கம் $1.5 பில்­லி­யன் ஆத­ர­வுத் திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­தி­ய­தைச் சுட்­டி­னார்.

இந்த ஆண்­டின் அதி­பர் சவால் நிதித் திட்­டம் குறைந்த வரு­மான குடும்­பங்­க­ளில்­தான் ஒரு­மித்த கவனம் செலுத்தி வந்து இருக்­கிறது என்­றும் அவர் கூறி­னார்.

கொவிட்-19ஐ பொறுத்­த­வரை சிங்­கப்­பூ­ரர்­கள் தொடர்ந்து எச்­சரிக்கை­யு­டன், விழிப்­பு­டன் இருந்து வர­வேண்­டும் என்று கூறிய அவர், புத்­தாண்டு எல்­லா­ருக்­கும் உடல்­நலத்­தோ­டும் அமை­தி­யோ­டும் மகிழ்ச்­சி­க­ர­மா­ன­தாக அமைய வேண்­டும் என்று வாழ்த்­தி­னார்.