58 ஆண்டுகள் கழித்து தாய்-மகள் சந்திப்பு

58 ஆண்டுகள் கழித்து தாய்-மகள் சந்திப்பு

2 mins read
5f1f0ccc-dedd-47d4-a73b-5ed7795d3b2c
-

திரு­வாட்டி தெங் எக் கியவ் என்ற மாதுக்கு வயது இப்­போது 90. அவ­ரின் கண­வ­ரான லிங் எக் கூன் 1989ல் மாண்டு­விட்­டார்.

இந்­தத் தம்­ப­திக்கு மொத்­தம் ஆறு பிள்­ளை­கள். இந்­தக் குடும்பம் முன்பு மலே­சி­யா­வில் திரங்­கா­னு­வில் புக்­கிட் பெசி என்ற நகர் அருகே கிரா­மம் ஒன்­றில் வசித்தது. பிறகு 1969ல் சிங்­கப்­பூ­ருக்கு குடி­பெ­யர்ந்­தது.

அதற்கு முன்­ன­தாக, 1964ஆம் ஆண்­டில் பிர­ப­ல­மான மலாய் குடும்­பம் ஒன்று இடை­வி­டா­மல் நச்­ச­ரித்­த­தால் திரு­வாட்டி தெங், தனது ஆறு பிள்­ளை­களில் ஒரு மகளை அந்­தக் குடும்­பத்­திற்குத் தத்து கொடுத்­தார்.

பிறகு காலம் ஓடி­யது. திரு­வாட்டி தெங்­கின் புதல்­வ­ரான லிங் கோக் ஓங், 66, என்­ப­வ­ரும் அவ­ரின் மனை­வி­யான ஜோச­ஃபின் இங், 62, என்­ப­வ­ரும் தத்து கொடுக்­கப்­பட்ட பெண்ணை மலே­சி­யர் வர­லாற்­றுச் சங்­கம் என்ற அமைப்­பின் உத­வி­யு­டன் திரங்­கா­னு­வில் புக்­கிட் பாயங்­கில் செப்­டம்­பர் 4ஆம் தேதி சந்­தித்­த­னர்.

ஹம்­சியா முகம்­மது என்ற அந்தப் பெண்­மணி, இப்­போது மலேசியா­வில் புக்­கிட் பாயாங்­கில் தாமான் தாசெக்­கில் காப்­பிக்­கடை ஒன்றை நடத்தி வரு­கி­றார்.

ஹம்­சியா முகம்­ம­து­வின் தாயா­ரான திரு­வாட்டி தெங்­கும் ஹம்­சி­யா­வும் காணொளி வழி பேச அவ்­வி­ரு­வ­ரும் ஏற்­பா­டு­களைச் செய்து கொடுத்­த­னர்.

பிறகு டிசம்­பர் 5ஆம் தேதி கோலா­லம்­பூ­ரில் அனை­வரும் சந்­தித்­த­னர். 58 ஆண்­டு­களுக்­குப் பிறகு தன் மக­ளைச் சந்­தித்து ஆனந்­தக் கண்­ணீர் விட்ட திரு­வாட்டி தெங், "என் மகள் அரு­மை­யான நல்ல ஒரு பெண்­ம­ணி­யாக வளர்ந்து இருக்­கி­றார்," என்று கூறி­னார்.

அந்­தச் சந்­திப்­பில் ஹம்­சி­யா­வின் இரு பிள்­ளை­களும் பேரப்­பிள்­ளை­களும் இதர உற­வி­னர்­களும் கலந்­து­கொண்­ட­னர்.

ஹம்­சி­யா­வின் கண­வர் காப்­பிக் கடையைக் கவ­னித்­துக்­கொள்ள வேண்டி இருந்­த­தால் அப்­போது அவர் வர­வில்லை.

சீனப் புத்­தாண்­டிற்­குப் பிறகு ஹம்­சியா சிங்­கப்­பூ­ருக்கு வருகை தர திட்­ட­மி­டு­கி­றார்.