கொலைக் குற்றம் சுமத்தப்பட்ட மாணவர் தேர்வு எழுதினார்

கொலைக் குற்றம் சுமத்தப்பட்ட மாணவர் தேர்வு எழுதினார்

1 mins read
aba14226-8d4e-4fc7-a966-a2ea90668634
-

தன்னுடைய சகமாணவரை சென்ற ஆண்டு கொலை செய்துவிட்டதாகக் கூறப்படும் ரிவர் வேலி உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர், விசாரணைக் காவலில் இருந்தபடியே ஓ நிலைத் தேர்வுகளை எழுதினார்.

அந்த 17 வயது மாணவர் 2021 ஜூலை 19ஆம் தேதி அந்தச் சம்பவம் நிகழ்ந்தது முதல் விசாரணைக் காவலில் வைக்கப்பட்டு இருக்கிறார்.

அந்தப் பதின்ம வயது மாணவன் தனிப்பட்ட முறையில் இந்த ஆண்டு தேர்வு எழுதியதாக சிங்கப்பூர் சிறைச்சாலை சேவைத் துறை கூறியது. அந்தத் தேர்வு நவம்பரில் நடந்ததாக சிங்கப்பூர் தேர்வு, மதிப்பீட்டுக் கழகம் தெரிவித்தது.

ரிவர் வேலி பள்ளிக் கூடத்தில் கழிவறை ஒன்றில் 13 வயது சகமாணவர் ஒருவரைக் கொலை செய்ததாக 2021 ஜூலை மாதம் அந்த மாணவன் மீது குற்றம் சுமத்தப்பட்டது.