சீனாவில் இருந்து இங்கு வரும் பயணிகளால் மிரட்டல் இராது

சீனாவில் இருந்து இங்கு வரும் பயணிகளால் மிரட்டல் இராது

2 mins read
f76f91f3-c9d5-4700-9fd0-f98fcb62e626
-

சீனா­வில் இருந்து வரும் பய­ணி­களால் சிங்­கப்­பூ­ருக்கு கொவிட்-19 மிரட்­டல் அவ்­வ­ள­வாக இராது.

சிங்­கப்­பூ­ரின் தடுப்­பூசி சாதனையும் மக்­கள் கொவிட்-19 தொற்­றுக்கு எதி­ராக மீள்­திறனுடன் திகழ்­வதும் காரணம்.

சீனா­வில் இருந்து கணி­ச­மான அளவுக்குச் சுற்­றுப்பய­ணி­கள் சிங்­கப்­பூ­ருக்கு வந்­தால், இலே­சான அள­வில் தொற்­றால் பாதிக்­கப்­படு­வோ­ர் எண்­ணிக்கை வேண்டு­மா­னால் கொஞ்­சம் கூடலாம்.

ஆனால், பெரிய அள­வில் மிரட்­டல் இருக்­காது என்று தொற்­று­நோய் வல்­லு­நர் தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தின் தொற்­று­நோய் துறை மூத்த ஆலோ­ச­கர் பேரா­சி­ரி­யர் டேல் ஃபிஷர் நேற்று இதுபற்றி கருத்து­ கூறினார்.

சீனா தன்­னு­டைய எல்­லை­களை வரும் ஜன­வரி 8ஆம் தேதி­யன்று திறந்­து­வி­ட­லாம் என்று திட்­ட­மி­டு­கிறது.

சீனா­வில் இருந்து வரும் பயணி­க­ளைப் பொறுத்­த­வரை, இப்­போ­தைய கொவிட்-19 விதி­மு­றை­களே தொடர்ந்து நடப்­பில் இருந்து வரும் என்று சிங்­கப்­பூர் தெரி­வித்து இருக்­கிறது.

சிங்­கப்­பூ­ருக்கு மிரட்­டல் ஏற்­படக்­கூ­டிய இரு வகை சாத்­தி­யங்­கள் உள்ளன. ஒன்று சிங்­கப்பூர் மக்­க­ளுக்கு ஏற்­ப­டக்­கூ­டிய தொற்று மிரட்­டல். இது மிக­வும் குறை­வா­கவே இருக்­கும்.

மற்­றொன்று சிங்­கப்­பூ­ரின் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு முறைக்கு ஏற்­படக்­கூ­டிய நெருக்­கடி என்று அவர் விளக்­கம் அளித்­தார்.

"சீனா­வில் இருந்து இங்கு வரக்­கூ­டிய பய­ணி­கள், இலே­சான தொற்று இருந்­தால்கூட உட­ன­டி­யாக மருத்­து­வ­ம­னைக்குப் போய்­விட வேண்­டும் என்ற சிந்­த­னை­யு­டன் இருப்­பார்­க­ளே­யா­னால், நமக்கு பிரச்­சினை ஏற்­படும்.

"ஆனால், அத்­த­கைய பய­ணி­களுக்குச் சில நிபந்­த­னை­களை எடுத்­துச் சொல்லி அதன் மூல­மா­கவே நாம் நில­வ­ரத்­தைச் சமா­ளித்­து­வி­ட­லாம் என நான் கருது­கிறேன்," என்றாரவர்.